scorecardresearch

ரிலீசுக்கு முன்பே கபாலி படம் தோல்வி எனக் கூறிய வைரமுத்து: ஷாக் ஃப்ளாஷ்பேக்

படத்திற்கு வித்தியாசமாக ப்ரமோஷன் செய்வதில் பெயர் பெற்ற தாணு கபாலி படத்திற்காக விமானத்தில் விளம்பரம் செய்திருந்தார்

Kalaipuli Rajini
கலைப்புலி தாணு – ரஜினிகாந்த்

பிரம்மாண்டமாக தயாரான ரஜினியின் கபாலி திரைப்படம் வெளியாகவதற்கு முன்பே படம் வெற்றியாகாது என்று கவிஞர் வைரமுத்து கணித்ததாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர் பா.ரஞ்சித். அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர், தொடர்ந்து கார்த்தியின் மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் கவனிக்கப்படும் இயக்குனராக மாறினார். அதனபிறகு 3-வது படமாக ரஜினியின் கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அட்டக்கத்தி மெட்ராஸ் என இரு வெற்றிப்படங்களை கொடுத்த பா.ரஞ்சித் தனது 3-வது படத்தில் ரஜினியுடன் இணைந்ததால் பெரிய படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். டீசர் டிரெய்லர் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அதிக வித்தியாசம் காட்டினார்.

படத்திற்கு வித்தியாசமாக ப்ரமோஷன் செய்வதில் பெயர் பெற்ற தாணு கபாலி படத்திற்காக விமானத்தில் விளம்பரம் செய்திருந்தது. ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்ததோடு மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. ஆனால் கபாலி படம் வெளியாவதற்கு முன்பே இந்த படம் ஓடாது என்று கவிஞர் வைரமுத்து கூறியதாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறியுள்ளார்.

சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசிய அவர், கவிஞர் வாலி வைரமுத்து இருவருடனும் எனக்கு பெரிய நெருக்கம் உண்டு. ஒருமுறை வாலி பிறந்த நாள் அன்று அவருக்காக ஒரு விளம்பரம் கொடுத்தேன். அந்த விளம்பரத்தை பார்த்த அவர், இந்த விளம்பரம் என்னை கவர்ந்துவிட்டது. இனிமேல் உன் படத்தின் பாடல்களுக்கு நான் காசே வாங்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அது கடைசிவரை நிலைத்தது.

அதேபோல் வைரமுத்து. கிழக்கு சீமையிலே படத்திற்காக அவருக்கு பேமெண்ட் கொடுக்க அவரது வீட்டுக்கு சென்று ரூ 50 ஆயிரம் கொடுத்தேன். நான் பாரதிராஜா படங்களுக்கு பாட்டு எழுதியதற்காக இதுவரை காசே வாங்கியதில்லை. ஆனால் அத்தனை படத்திற்கும் சேர்த்து இப்போது நீ கொடுத்துவிட்டாய் நீ ஒரு குட்டி தேவர் என்று சொன்னார். ஆனால் அவருக்கும் எனக்கும் பலமுறை நெருடல் வந்துள்ளது. கபாலி படம் வெளியாகவில்லை. அவரும் பார்க்கவில்லை. ஆனால் கபாலி வெளியீடே அதன் தோல்வி என்று சொல்லிவிட்டார். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema producer kalaipuli dhanu says about kabali movie and vairamuthu