சம்பளத்தை திருப்பித் தந்த விஜயகாந்த்; டி.ஆர் உடன் வெடித்த மோதல்': தாணு ஃப்ளாஷ்பேக்

50 லட்சமாக இருந்த விஜயகாந்தின் மார்க்கெட்டை ஒரு கோடிக்கு எடுத்துச்சென்ற படம் இந்த கூலிக்காரன்.

50 லட்சமாக இருந்த விஜயகாந்தின் மார்க்கெட்டை ஒரு கோடிக்கு எடுத்துச்சென்ற படம் இந்த கூலிக்காரன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kalaipuli S Dhanu

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு

படத்தில் நடிப்பதற்காக வாங்கிய அட்வான்ஸ் பணத்தை படம் பெரிய வெற்றியை கொடுத்தவுடன் அந்த பணத்தை நடிகர் விஜயகாந்த் திருப்பி கொடுத்ததாக தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தன்கென தனி இடத்தை பெற்றுள்ள நடிகர் விஜயகாந்த், திரைத்துறையில் கேப்டன் என்ற அடைமொழியுடன் சக நடிகர்கள் மட்டுமல்லாமல் பலருக்கும் உதவி செய்துள்ளார். அதேபோல் அரசியலுக்கு வரும் முன்னே மக்களுக்கு உதவி செய்யும் மனம் கொண்ட விஜயகாந்த் தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சினிமா அரசியல் என இரண்டிலும் இருந்து விலகி இருக்கி0றார்.

ஆனாலும் அவருடன் பழகிய நண்பர்கள் சக நடிகர்கள் என பலரும் அவ்வப்போது விஜயகாந்த் குறித்து பலரும் அறியப்படாத தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தற்போது கூறியுள்ள தகவல் இணயைத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் ஒரு மேடையில் எனக்கு படம் பண்ணுவதாக தெரிவித்தார். அதன்பிறகு யார் கண்ணன் சக்தி கண்ணன் இருவரையும் கதை பண்ண சொன்னார். ஆனால் இருவரும் சண்டைபோட்டு பிரிந்ததால், அந்த படம் தாமதமான நிலையில், ரஜினிகாந்த் எதாவது வேறு படம் பண்ணுங்க என்று என்னிடம் சொன்னார். அப்போது விஜயகாந்த் அவரிடம் பேசியிருக்கிறேன் என்று சொன்னேன்.

Advertisment
Advertisements

அப்போது ரஜினிகாந்த் ஒரு வேற்று மொழி படத்தை குறிப்பிட்டு இந்த கதையை விஜயகாந்துக்கு சொல்லி படமாக்குங்கள் என்று சொன்னார். அப்படி உருவான படம்தான் கூலிக்காரன். இந்த படத்தின் கதையை முதலில் கேட்ட விஜயகாந்த் ஓகே சொல்லி அட்வான்ஸ் வாங்கிவிட்டார். படத்தின் பணிகள் முடிந்து ரிலீஸ் ஆனதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்தது.

Vijayakanth T Rajendar
விஜயகாந்த் - டி.ராஜேந்தர்

50 லட்சமாக இருந்த விஜயகாந்தின் மார்க்கெட்டை ஒரு கோடிக்கு எடுத்துச்சென்ற படம் இந்த கூலிக்காரன். இந்த படத்தில் தான் விஜயகாந்த் முதன் முதலாக ஷூட்டிங்கிற்காக விமானத்தில் சென்றார். படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து மீதமுள்ள சம்பள தொகையை கொடுக்க நான் சென்றேன். ஆனால் விஜயகாந்த் அந்த பணத்தை வாங்க மறுத்தவிட்டார். நான் எவ்வளவோ வற்புறுத்தியும் அதை வாங்க மறுத்த விஜயகாந்த் வருடத்திற்கு ஒரு படம் நாம பண்ணலாம் நீங்கள் வேறு யாரிடமும் டேட் கேட்டு அலைய வேண்டாம் என்று கூறினார்.

அதேபோல் இந்த படத்திற்கு முதலில் இசையமைக்க இருந்தவர் டி.ராஜேந்தர். அவர் ப்ரியாகவே பண்ணித்தருவதாக சொன்னார். ஆனால் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் இருவரும் பிரிந்துவிட்டோம். அதன்பிறகு என்னை பற்றி அவரும் அவரை பற்றி நானும் நியூஸ் பேப்பர்களில் விளம்பரம் வெளியிட்டு திட்டிக்கொண்டோம். அதன்பிறகு டி.ராஜேந்தர் எனக்கு போன் செய்து இனிமேல் இப்படி செய்ய வேண்டாம். என்று சொன்னார். இப்போது நானும் அவரும் நண்பர்களாக இருக்கிறோம் என்று கலைப்புலி தாணு கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: