/indian-express-tamil/media/media_files/tiKhb9LvOVRZF5WLeAdA.jpg)
தனுஷ் இயக்கி நடித்த ராயன் படம் வசூலில் ரூ100 கோடியை கடந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளராக கலாநிதி மாறன் தனுஷ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் 2 செக் கையில் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர், தாயரிப்பாளர், இயக்குனர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமை கொண்டவர் தனுஷ். நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்த இவர், ராஜ்கிரன் நடிப்பில் வெளியான பா.பாண்டி என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், இயக்குனராக தனுஷ் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தார்.
அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய தனுஷ், தனது 50-வது படத்தை தானே இயக்கி நடிக்க முடிவு செய்திருந்தார். அதன்படி உருவான படம் தான் ராயன். 3 சகோதரர்கள், ஒரு தங்கை என 4 பேருக்கு இடையே நடக்கும், கேங்ஸ்டர் கதையம் கொண்ட இந்த படத்தில் தனுஷூடன், சந்திப் கிஷான், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்னா பாலமுரளி, எஸ்.ஜே.சூர்யா, வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ்ராஜ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில். படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டாக தாயரித்திருந்தது. கடந்த ஜூலை 26-ந் தேதி வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், தனுஷின் நடிப்பு, மற்றும் இயக்கம் திரைக்கதை என பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது.
Mr. Kalanithi Maran congratulated @dhanushkraja for the grand success of #Raayan and presented 2 cheques to him - one for the hero and one for the director. pic.twitter.com/gp12Z8s6bl
— Sun Pictures (@sunpictures) August 22, 2024
தற்போது ராயன் படம் வசூலில் ரூ100 கோடியை கடந்துள்ள நிலையில், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், தனுஷ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். ராயன் படம் பெரிய வெற்றி பெற்ற மகிழ்ச்சியின் இருக்கும் கலாநிதிமாறன், தனுஷை சந்தித்து இரண்டு செக் வழக்கியுள்ளார். அதில் ஒரு செக் இயக்குனர் தனுஷ் மற்றொரு செக் நடிகர் தனுஷ் என இரு செக் வழங்கியுள்ளார். ஒவ்வொரு செக்கும் தலா ஒரு கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.