டிவி நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்ட பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் தற்போது மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு விலை மதிப்பில்லாத ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டிவி நடிகை மகாலட்சுமியை திருப்பதியில் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் தொட்ர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், அதன்பிறகு இவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் கவனம் ஈர்த்து வந்தது.
அந்த வகையில், சமீபத்தில் திருமணமாகி 100-வது நாளை கொண்டாடிய ரவீந்திரன் மகாலட்சுமி ஜோடி அந்த புகைப்படங்களை தங்களது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்ததன, இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், தற்போது தனது காதல் மனைவி மகாலட்சுமியின் பிறந்த நாளை முன்னிட்டு தயாரிப்பாளர் ரவீந்திரன் விலை மதிப்பில்லாத பரிசாக வழங்கியுள்ளார்.
அந்த விலை மதிப்பில்லாத பரிசு ஒரு முழம் மல்லிகைப்பூ தான். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பிறந்தநாள்… ஆம். இன்று என் மகாலக்ஷ்மிக்கு பிறந்தநாள்.
பிரம்மனின் மொத்த கற்பனையாய் எனக்கு விற்பனையானவள் என் மகாலக்ஷ்மி. வாழ்க்கைல அது இஷ்டத்துக்கு ஒன்னு வந்தாதான் அத அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. அந்த அதிர்ஷ்டம்தான் என் மகாலக்ஷ்மி. ஒரு மனிதன் தான் பிறந்ததிலிருந்து எல்லா விஷேச நாட்களையும் கொண்டாடுவான். ஆனா அவன் பிறந்தத ஒரு விசேஷமா கொண்டாடுறது அவன் குடும்பம்தான். ஒரு காலகட்டத்துக்கு அப்புறம் அத கொண்டாடுறது அவனால உருவாக்கப்பட்ட குடும்பம். அப்படி உன்னால உருவாக்கப்பட்ட குடும்பத்தோட ஒரு ஆளாதான் உன் பிறந்தநாள நா கொண்டாடுறேன்.
நம்ம வாழ்க்கைல நாம நிறைய பேர நேசிப்போம். அவங்க நம்மல நேசிக்கனும்னு அவசியம் இல்ல.அவங்க நம்ம மேல மரியாதையாவும் அன்பாவும் இருப்பாங்க. ஆனா நாம பல பேர நேசிக்க மறந்துருப்போம். அவங்க நம்மல அளவுக்கு அதிகமா நேசிக்குறவங்களா இருப்பாங்க. அப்படி ஒன்னு என் கண்ணுல தென்பட்டப்பதான் உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னே தோனுச்சு. மகாலக்ஷ்மி.. காலைல இருந்து ஒரே யோசனை. உன் பிறந்தநாளுக்கு என்ன செய்றதுனு. 12 மணிக்கு கேக் வெட்றது ஸ்வீட் குடுக்குறது முதியோர் இல்லம் அனாதை இல்லன்னு போய் சாப்பாடு போடுறது பிடிச்ச கிப்ட் வாங்கி குடுக்குறது இப்டி எல்லாமே எப்பையுமே உனக்கு எல்லாரும் பண்றதுதான். ஆனா எனக்கு உன்ன பிடிக்கும். அதனால எனக்கு பிடிச்ச ஒன்ன உனக்கு கொடுக்கனும்னு தோனுச்சு.
அப்படி ஒரு விஷயம்தான் இந்த ‘மல்லிகை பூ’. நாம நம்ம தேவைக்கு எத வேணாலும் வாங்கிக்க முடியும்ற போது இந்த பூவ உனக்கு குடுக்குறதுக்கு ஒரே காரணம் தான். இந்த பூவிற்கு நிகர் ஏதுமில்ல என் மகாலக்ஷ்மிக்கு நிகரும் யாருமில்ல. என்னப் பொருத்தவர இந்த பூ மிகப்பெரிய ஒரு கிப்ட் உனக்கு நா இன்னைக்கு குடுக்குறதுக்கு. மத்த பொருள நா வாங்கி குடுக்குறதுல இருக்குற அன்ப விட அன்பே உருவான இந்த பூ வில் அதிகமா இருக்கு. சோ மை ஹம்பல் கிப்ட் (So my humble gift) வாங்கிக்கோ. இதுக்கப்புறம் உனக்கு பிடிச்ச எந்த பொருளையும் காசு குடுத்து நீ வாங்கிக்கலாம். ஆனா இந்த பூ என் வாழ்க்கைலயே முதன்முதலா ஒரு பொண்ணுக்கு நா வாங்கி குடுக்குற கிப்ட். அது உனக்குதான். ஐ லவ் யூ மகாலட்சுமி ஹேப்பி பர்த்டே என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/