தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர் ரவீந்தரும் அவரது காதல் மனைவியும் பிரபல சீரியல் நடிகையுமான மகாலட்சுமியும் தங்களது முதல் திருமண நாளை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில், சீரியல்களில் வில்லி ரோல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. தமிழ் சினிமாவில் தனது லிப்ரா நிறுவத்தின் மூலம் சில படங்களை தயாரித்தவர் ரவீந்திரன். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு திடீரென திருப்பதியில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது.
இந்த திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்த நிலையில், ஒரு சிலர் விமர்சனங்களை பதிவு செய்திருந்தனர். ஆனால் எதையுமே கண்டுகொள்ளாத ரவீந்திரன் – மகாலட்சுமி ஜோடி தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ தொடங்கினர். திருமணத்திற்கு பின்னும் மகாலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். அதேபோல் ரவீந்திரன் தனது மனைவிக்கு பல பரிசுகளை வழங்கி மகிழ்வித்தார்.
மேலும் இவர்கள் திருமணத்திற்கு பின் தங்களது சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. அதே சமயம் இவர்கள் இருவரும் விரைவில் விவாரத்து செய்ய உள்ளதாகவும் இணையதளங்களில் தகவல்கள் வேகமாக பரவியது. ஆனாலும் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தங்களது வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தனர்.
இதனிடையே ரவீந்திரன் மகாலட்சுமி தம்பதி இன்று தங்களது முதல் திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இந்த கொண்டாட்டத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தங்களது சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“