இந்த படம் ஓடுனா விஜி மார்க்கெட் போய்டுமா? ராவுத்தருக்கு பயம் காட்டிய பிரபல நடிகர்: அவருடன் கேப்டன் நடித்த ஒரே படம்!

எப்போதும் விஜயகாந்த் பற்றியே யோசித்த ராவுத்தருக்கு பிரபல நடிகர் நடித்த ஒரு படம் அவரின் தூக்கத்தை கெடுத்துள்ளது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

எப்போதும் விஜயகாந்த் பற்றியே யோசித்த ராவுத்தருக்கு பிரபல நடிகர் நடித்த ஒரு படம் அவரின் தூக்கத்தை கெடுத்துள்ளது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

author-image
WebDesk
New Update
Vijayakanth Ravutheer

தமிழ் சினிமாவில் இன்றுவரை ரசிகர்கள் போற்றும் சிறந்த நட்புகளில் ஒன்று விஜயகாந்த் – இப்ராஹிம் ராவுத்தர். எப்போதும் விஜயகாந்த் பற்றியே யோசித்த ராவுத்தருக்கு பிரபல நடிகர் நடித்த ஒரு படம் அவரின் தூக்கத்தை கெடுத்துள்ளது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

எவ்வித சினிமா பின்புலமும் இல்லாமல் தனது முயற்சி மற்றும் திறமையின் அடிப்படையில் வெற்றி பெற்ற பல நடிகர்களின் பட்டியலில், விஜயகாந்த்துக்கு முக்கிய இடம் உண்டு. சினிமா வாய்ப்பு தேடி அலைந்த காலக்கட்டத்திலும், இவரும் இவரது நண்பர் இப்ராஹிம் ராவுத்தரும், இணைபிரியா நண்பர்களாக வாழ்ந்தனர் என்பது சினிமா வட்டாரத்தில் இன்றும் பலரும் பேசி வருகின்றனர். சினிமாவில் விஜயகாந்த் எப்படி வர வேண்டும் என்பது குறித்து 24 மணி நேரமும் சிந்திக்கும் ஒரு நபர் தான் இப்ராஹிம் ராவுத்தது.

வெளிப்படங்களில் நடித்துக்கொண்டு இருந்த விஜயகாந்த், அடுத்து தனது நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் தயாரிப்பில், பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு, அதே சமயம், தயாரிப்பாளர் நடிகர் என்ற பாகுபாடு இல்லாமல், வாழ்ந்துள்ளனர். விஜயகாந்தை எம்.ஜி.ஆர் போல் கொண்டுவர வேண்டும் என்று பல வழிகளில் முயற்சி செய்த இப்ராஹிம் ராவுத்தருக்கு, தூக்கதை தொலைக்கும் சங்கடத்தை கொடுத்தவர் தான் நடிகர் முரளி. எப்படி தெரியுமா?

விஜயகாந்த் ஆரம்ப கால படங்களில் அவரது ஹேர்ஸ்டைல், கருப்பான தோற்றம், பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த வரிசையில், அவரைப்போலவே தொற்றம் கொண்ட ஒரு நடிகர் தான் முரளி. அவர் அப்போது பொன்விலங்கு படத்தில் நடித்துக்கொண்டு இருந்துள்ளார். இந்த படத்தின் போஸ்டரை பார்த்த இப்ராஹிம் ராவுத்தர், இந்த பையன் பார்க்க விஜி மாதிரியே இருக்கான் அண்ணே என்று கூறியுள்ளார். பொதுவாக தமிழ் படங்களை பார்க்க தியேட்டருக்கு செல்லாத இப்ராஹிம் ராவுத்தர், முரளியின் பொன்விலங்கு படத்தை பார்க்க சென்றுள்ளார்.

Advertisment
Advertisements

Vijayakanth Murali

இப்ராஹிம் ராவுத்தர் – விஜயகாந்த் இருவருக்கும் நெருங்கிய நண்பராக இருந்த இயக்குனரும் வசன கர்த்தாவுமான லியாகத் அலிகானை அழைத்துக்கொண்டு தியேட்டருக்கு சென்ற, ராவுத்தர் வெளியில் நின்று பொன்விலங்கு போஸ்டரையே பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். இப்போது படம் முடிந்து வெளியில் வந்தவர்களிடம் லியாகத் அலிகானை விட்டு படம் எப்படி இருக்கிறது, முரளியின் நடிப்பு எப்படி என்று விசாரிக்குமாறு கூறியுள்ளார். அவர் விசாரிக்கும்போது அனைவரும பாசிட்டீவான பதிலே கூறியுள்ளனர்.

மேலும், விஜயகாந்த் ரசிகர்கள் மன்றத்தை சேர்ந்த இருவர், இவர் அண்ணன் மாதிரியே இருக்காரு, சூப்பரா நடிச்சிருக்கார் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளனர். இதனால் சோகமான ராவுத்தர் அன்று இரவு சாப்பிடாமலே இருந்துள்ளார், மேலும், லியாகத் அலிகானிடம், அண்ணே இந்த படம் ஓடினால் விஜி மார்க்கெட் இறங்கிடுமா என்று கேட்டுள்ளார். இதை கேட்ட அவர் அப்படியெல்லாம் ஆகாதுணே என்று சொல்ல, இதை விஜயகாந்த் கேட்டவிட்டு, ராவுத்தரை திட்டியுள்ளார்.

மேலும், மதுரையில் இருந்து சினிமாவில் நடிக்க வந்தோம், வாய்ப்பு தேடி அலைந்தோம், இப்போ வாய்ப்பு கிடைத்து நன்றாக இருக்கிறோம். நாம் மட்டும் தான் வரணுமா? மற்றவங்க வர கூடாதா? அவங்களும் வரட்டும்டா என்று சொல்லிவிட்டு லியாகத் அலிகானிடம் இவன் பேசுவதை பெரிதாக எடுத்தக்கொள்ளாதீங்க அண்ணே என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். இதை லியாகத் அலி கானே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 1994-ம் ஆண்டு வெளியான என் ஆசை மச்சான் படத்தில் விஜயகாந்த் - முரளி இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: