/tamil-ie/media/media_files/uploads/2022/04/singaravelan.jpg)
Tamil Cinema Update : தமிழ் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து நாயகனாக உயர்ந்தவர் நடிகர் விமல். பசங்க படத்தின் மூலம் அறிமுகமானி, களவாணி, வாகை சூடவா. கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த விமல் நடிப்பில் கடைசியாக வெளியான விலங்கு வெப் சிரீஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகராக மட்டுமல்லாமல் தயரிப்பாளராகவும் உயர்ந்த விமல் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான மன்னர் வகையறா படத்தை தயாரித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தை தயாரிக்கும்போது நடிகர் விமல் தன்னிடம் 5 கோடி கடன் வாங்கியதாவும் படத்தின் லாபத்தில் பங்கு தருவராகவும் கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் கடந்த வாரம் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரில் தன்னை ஏமாற்றிய விமல் மீது ந்டவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். தனக்கு தரவேண்டிய பணத்தை பெற்றுத்தருமாறும் கோரிக்கை வைத்துள்ள சிங்காரவேலன், விமல் கடந்த 2020ம் ஆண்டு தன் மீது கொடுத்த பொய் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில். தன்னிடம் 5 கோடி மோசடி செய்துவிட்டதாக நடிகர் விமல் கடந்த 2020-ம் ஆண்டு அளித்த புகாரின் பேரில் வழக்கு பதஜிவு செ்த போலீசார் தற்போது தயாரிப்பாளர் சிங்கார வேலனை கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கை தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.