தமிழ் சினிமாவுக்கு இந்த மாதிரி நடிகைகள் தேவையே இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆதங்கம்

தான் ப்ரமோஷனுக்க வந்தால் தனக்க நிகரானவர்கள் எனது பக்கத்தில் அமர வேண்டும் என்ற பல கண்டிஷன்களை சொன்னார்.

தான் ப்ரமோஷனுக்க வந்தால் தனக்க நிகரானவர்கள் எனது பக்கத்தில் அமர வேண்டும் என்ற பல கண்டிஷன்களை சொன்னார்.

author-image
WebDesk
New Update
Suresh kamatch andh

ப்ரமோஷனுக்கு வருவதற்கு தனியாக சம்பளம் கேட்ட நடிகை தமிழ் சினிமாவுக்கு தேவையில்லை அவர் அவுட் ஆஃப் சிட்டியிலேயே இருக்கட்டும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

வி6 ஃபிலிம்ஸ் வேலாயுதம் தயாரிப்பில், ஸ்ரீவெற்றி இயக்கியுளள் இந்த படத்தில், ஜெயில் மற்றும் இறுகப்பற்று படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை அபர்ணாதி நாயகியாக நடித்துள்ளார். செஸ் விளையாட்டை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தின் நடிகை அபர்ணாதி குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து வெளியீட்டுக்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டபோது, ப்ரமோஷனுக்கு வர வேண்டும் என்று நடிகையை அழைத்தோம். ஆனால் அவர் வர முடியாது என்று சொல்லிவிட்டார். இதை பற்றி தயாரிப்பாளர் என்னிடம் சொன்னபோது நான் அவரிடம் போன் செய்து விசாரித்தேன். அப்போது அவர் தனியாக 3 லட்சம் கொடுத்தால் தான் ப்ரமோஷனுக்க வருவேன் என்று கூறினார். அவரிடம் எவ்வளவோ கேட்டும் அவர் வர மறுத்துவிட்டார்.

மேலும் தான் ப்ரமோஷனுக்க வந்தால் தனக்க நிகரானவர்கள் எனது பக்கத்தில் அமர வேண்டும் என்ற பல கண்டிஷன்களை சொன்னார். அதன்பிறகு நான் நீங்கள் நடிகர் சங்கத்தில் புகார் கொடுங்கள். படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் நான் செல்லவில்லை என்று சொல்லுங்கள் என்ற சொன்னபோது தான் தெரிந்த்து அவா நடிகா சங்கத்தில் இல்லை என்று. அதன்பிறக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தோம். 

Advertisment
Advertisements

தயரிப்பாளர் சங்கம் அவரை விசாரணைக்க அழைத்தும் அவர் விசாரணைக்கு வரவில்லை. அதன்பிறகு ஒரு சில நாட்கள் கழித்து அவரே போன் செய்து நான் செய்த்து தவறு என்னை மன்னித்துவிடுங்கள் என்ற சொன்னார். அதன்பிறகு ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு வாருங்கள் உங்கள் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும் என்ற சொன்னேன். வருகிறேன் என்று சொன்னவர் அதன்பிறகு போன் செய்தால் எடுக்கவே இல்லை என்று சொன்ன சுரேஷ் காமாட்சி, அருகில் இருப்பவரிடம் உங்களுக்கு எதாவது கால் பண்ணாங்களா என்ற கேட்டார்.

எனக்கு கால் செய்து அவுட் ஆஃப் சிட்டியில் இருப்பதாக சொன்னார் என்று அவர் சொல்ல, அவர் அவுட் ஆஃப் சிட்டியிலே இருக்கட்டும். இங்கு வர வேண்டாம். தமிழ் சினிமாவிற்கு இப்படிப்பட்ட நடிகைகள் தேவையே இல்லை என்ற சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: