தனக்காக 50 பைசா அதிகமாக செலவு செய்தால் சத்தம்போடுவார் ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் அன்லிமிட்டேடு சாப்பாடு போட்டவர் விஜயகாந்த் என்று தயாரிப்பாளர் டி.சிவா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில், 1987-ம் ஆண்டு வெளியான சொல்வதெல்லாம் உண்மை என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் டி.சிவா. தொடர்ந்து பூந்தோட்ட காவல்காரன், பாட்டு ஒரு தலைவன் என விஜயகாந்தை வைத்து தொடர்ந்து 3 வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார்.
மேலும் 2009-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த மரியாதை படத்தையும் தயாரித்தவர் டி.சிவா. தாயாரிப்பாளராக மட்டுமல்லாமல் 2008-ம் ஆண்டு வெளியான தூண்டில் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமான இவர், ஜீவா, பாயும்புலி, சென்னை 28 2, லத்தி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும், தனது தனித்திறமையால் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்த நடிகர் விஜயகாந்த், தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகியுள்ளார். அதேபோல் அவர் ஆக்டீவாக இருந்த காலகட்டத்தில் அவருடன் இருந்த நெருங்கிய நண்பர்கள் தயாரிப்பாளர்கள், சக நடிகர்கள் என பலரும் பொது நிகழ்ச்சிகளில் விஜயகாந்த் குறித்து பேசி வருகின்றனர்.

அந்த வகையில் தயாரிப்பாளர் டி.சிவா தற்போது பேசியுள்ளர் இணையத்தில் வைரலாகி வருகிறது. 1986-ம் ஆண்டு முதல்முறையாக விஜயகாந்தை சந்தித்த கதை சொல்லி படம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக அவருக்கு 3 லட்சம் சம்பளம் பேசக்கட்டது. அவருக்கான அட்வான்ஸ் தொகை ரெடி பண்ண கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது.
அந்த சமயத்தில் வெளியான கரிமேடு கருவாயன் என்ற படம் பெரிய வெற்றியை பெற்றது. அப்போது நான் அட்வான்ஸ் பணத்துடன் வந்தபோது ராவுத்தர் விஜயகாந்த் சம்பளம் 4.5 லட்சம் என்று சொன்னார். ஆனாலும் எல்லாம் முடிவு செய்யப்பட்டுவிட்டது என்பதால் ஒப்புக்கொண்டேன். அதன்பிறகு விஜயகாந்தை சந்தித்து பேசினேன். என்ன ராவுத்தர் சம்பளம் ஏத்திடானா என்று கேட்டார். ஆமாம் என்று சொன்னவுடன் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார்.
அதன்பிறகு படம் முடிந்தது வெளியானது. விஜயகாந்த் என்னை அழைத்து என்ன ஆச்சு என்று கேட்டார். அதற்குள் என்னுடன் இருந்த பார்டனர்கள் பிரச்சனை செய்ததால் இவ்வளவு நஷ்டம் என்று சொன்னேன். சரி நான் பார்த்துக்கொள்கிறேன் விடு என்று சொல்லிவிட்டு, உழவன் மகன் படம் முடிய போகுது ஃபுல்லா கூட இருந்து பார்த்துகோ நண்பர்கள் எல்லாம் இருக்காங்க நீயும் கூடவே இரு என்று சொல்லி சேர்த்துக்கொண்டார்.
அதன்பிறகு தமிழ் அன்னை கிரியேஷன் என்று ஒரு நிறுவனம் தொடங்கி டி.சிவா தமிழ் பாத்திமா என்று இருவரை தயாரிப்பாளர்களாக போட்டு சிவாவுக்கு 20 பர்சென்ட் ஷேர் கொடுத்துவிடுங்கள் என்று சொன்னார். நான் எடுத்த படத்திற்கு என்ன நஷ்டம் ஆனதோ அதைவிட 3 மடங்கு எனக்கு பணம் கொடுத்தார். போதுமா திருப்தியா என்று கேட்டார். அங்குதான் என் வாழ்க்கை துவங்கியது.
அதன்பிறகு என் கையில் ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்து தனியா படம் பண்ணு என்று சொல்லி பிரபுவுக்கு அட்வான்ஸ் கொடு என்று சொன்னார். அதன்பிறகுதான் சின்ன மாப்பிள்ளை படம் தொடங்கியது. அதை தொடங்கி வைத்தவர் விஜயகாந்த். மிகவும் எளிமையாக நடந்துகொள்வார். அருகில் இருப்பவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தால் அவர் தட்டில் இருந்து எடுத்து சாப்பிடுவார் அவ்வளவு எளிமையானவர்.
ஒருநாள் பையனை கூப்பிட்டு எப்போவும் பச்சை கலர் சோப்புதானே வைப்பீர்கள் இப்போ என்ன சிகப்பு கலர் சோப்பு இருக்கிறது என்று கேட்டார். அந்த சோப்பின் பெயர் கூட அவர் மைன்டில் வைத்திருக்கமாட்டார். அதற்கு அந்த பையன் புதுசா வந்திருக்கு என்று சொன்னார். அது எவ்வளவு 2 ரூபாய். இது எவ்வளவு 2.50 ரூபாய் என்று சொன்னார்கள்.

அதை கேட்ட விஜயகாந்த் டேய் எதுக்குடா 50 பைசா கூட செலவு பண்றீங்க என்று கேட்டு அடிக்க போனார். இனிமேல் பச்சை சோப்புதான் வாங்க வேண்டும் என்று சொன்னார். இதுதான் எளிமை. ஆனால் கட் பண்ணால் அப்படியே உழவன் மகன் ஷூட்டிங் போனால் அங்கு அனைவருக்கும் சாப்பாடு போடும் ஏரியால் அப்படியே நடப்பார். எல்லாம் சரிய சாப்பாடு கொடுக்கிறார்களா என்று பார்ப்பார். நான்வெஜ் போடுவது விஷயம் அல்ல அதையும் அன்லிமிட்டேடா போடனும் என்பது தான் அவரது முதல் சாதனை.
அனைவரையும் விசாரித்து விட்டு கடைசியாகதான் அவர் போய் சாப்பிடுவார். அவருக்கு தனிப்பட்டதாக ஒரு 50 பைசா சோப்புக்கு திட்டினார். ஆனால் வயிறு நிறைய ஒரு 500 பேர் சாப்பிட வேண்டும் என்று நினைத்தார். ஆனால் இந்த முறையை நான் எதிர்த்தேன். நான் ஒரு சிறு தயாரிப்பாளர். இவ்வளவு பேருக்கும் சாப்பாடு போட எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்டார்.
சுமார் 3 லட்சம் வரை செலவாகும் என்று சொன்னேன். சரி ஓகே எல்லா படத்திலேயும் 3 லட்ச ரூபாய் என் சம்பளத்தில் இருந்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். விஜயகாந்த் ஷூட்டிங்கில் இப்படித்தான் சாப்பாடு போடுவார்கள் என்று அனைவருக்கும் தெரியும் உழவர் மகன் நாயகன் படங்களின் ஷூட்டிங் நடந்துட்டு இருக்கு.
நாயகன் படத்தில் தயிர் சாதம் தக்காளி சாதம் என பொட்டலம் போட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் இங்கு இலை வைத்து விருந்து நடந்துகொண்டிருக்கிறது. இதை பார்த்துதான் மொத்த கம்பெனியும் சாப்பாடு போட தொடங்கினார்கள் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil