Advertisment

புஷ்பா 2 டீசர் எப்போது? அல்லு அர்ஜூன் வெளியிட்ட முக்கிய அப்டேட்

புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இருந்த நடிகர்களுடன், ஜெகபதிபாபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் புதிதாக 2-ம் பாகத்தில் இணைந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Pushpa 2 Teaser

புஷ்பா 2 டீசர் அப்டேட்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்திய சினிமாவில் நடப்பு ஆண்டில் எதிர்பார்க்கப்படும் முக்கிய படங்களில் ஒன்றாக இருக்கும் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 8-ந் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. சந்தன மர கடத்தல் அதில் நடக்கும் அரசியலை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில், தனன்ஜெயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் நடிகை சமந்தா இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

‘’உ சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா’’ என்ற இந்த பாடலும், இந்த பாடலுக்கான சமந்தாவின் ஆட்டமும் படத்திற்கு பெரிய வரவேற்பை கொடுத்திருந்தது. பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா, வசூலில் சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் இருந்த நடிகர்களுடன், ஜெகபதிபாபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் புதிதாக இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புஷ்பா 2 படம் வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ஏப்ரல் 8-ந் தேதி நடிகர் அல்லு அர்ஜூன் பிறந்த நாளை முன்னிட்டு புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து நடிகர் அல்லு அர்ஜூன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புஷ்பா 2 போஸ்டருடன் அறிவித்துள்ளார். இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Allu Arjun
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment