Allu Arjun Pushpa Movie Samantha Song Viral : தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையான சமந்தா அல்லு அர்ஜூன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன் ஆலா வைகுந்தபுரம்லோ படத்திற்கு பிறகு தற்போது புஷ்பா என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் சுகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில் ரேஷ்மிகா மந்தானா நாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ், சுனில், தனஞ்சேயா ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடித்துள்ளார்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படம் தெலுங்கு தமிழ் மலையாளம் கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வரும் 17-ந் தேதி வெளியாக உள்ள இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தில் முன்னணி நடிகையான சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். தமிழில் ஆண்ட்ரியா பாடியுள்ள இந்த பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா தற்போது விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் மற்றும் சோதா ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையே அல்லு அர்ஜூனின் நட்பு காரணமாக புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். ஹம் சொல்றியா ஹூம் சொல்றியா என்று தொடங்கும் அந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த பாடலை பார்த்த ரசிகர்கள் பலரும் சமந்தா மற்றும் ஆண்ரியாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதில் ஒரு ரசிகர் ஆண்ட்ரியாவின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று என்றும், ஆண்டரியா வாய்ஸ், சமந்தா கிளாமர் டான்ஸ் வேற லெவல் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் படத்திற்காக வெயிட்டிங் என்றே கூறியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil