Advertisment

கருத்த மச்சான்... உருமி சத்தம் வந்த முதல் தமிழ் பாட்டு: இப்போ ட்ரெண்டாக காரணம் என்ன?

இன்றைய பாடல்கள் 2கே குழந்தைகளுக்கு பிடித்திருந்தாலும், பொதுவான ரசிகர்கள் மத்தியில் பாடலை விட பின்னணி இசை தான் காதை கழிக்கிறது என்ற கருத்து பொதுவானதாக இருக்கிறது.

author-image
WebDesk
New Update
Suganya Karutha Macha

சமீப காலமாக பழைய சினிமா பாடல்கள் ட்ரெண்டிங் ஆகி வரும் நிலையில், பழைய பாடல்களின் அருமை இப்போது தான் தெரிகிறது என்ற கருத்துக்கள் மேலோங்கி இருந்தாலும், இந்த பாடல்கள் ட்ரெண்டாக காரணம் என்ன என்பது குறித்து ஆலங்குடி வெள்ளைச்சாமி ஒரு வீடியோவில் கூறியுள்ளார்.

Advertisment

இன்றைய காலக்கட்டத்தில் தமிழ்சினிமாவில் வருடத்திற்கு 300-க்கு மேற்பட்ட படங்கள் வெளியானாலும், பாடல்கள் என்பது ரசிக்கும் வகையில் இல்லை என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுந்து வருகிறது. இன்றைய பாடல்கள் 2கே குழந்தைகளுக்கு பிடித்திருந்தாலும், பொதுவான ரசிகர்கள் மத்தியில் பாடலை விட பின்னணி இசை தான் காதை கழிக்கிறது என்ற கருத்து பொதுவானதாக இருக்கிறது.

இதன் காரணமாக அவ்வப்போது பழைய பாடல்கள் ட்ரெண்டிங் ஆவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், லியோ படத்தில் இடம் பெற்ற,கரு கரு கருப்பாயி, தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் எண்ணெய்க்கும், சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படத்தில் இடம் பெற்ற நீ பொட்டு வச்ச தங்க குடம் உள்ளிட்ட பழைய பாடல்கள், தற்போது ட்ரெண்டாகும் நிலை உருவாகியுள்ளது.

Advertisment
Advertisement

இந்த பாடல்களை புதிய படங்களில் இடம்பெற்ற பாடல்கள் என்று நினைத்து பல 2 கே ரசிகர்களும் ரசித்து வருகின்றனர், அந்த வகையில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பாடல் தான், கருத்த மச்சான் பாடல். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதுநெல்லு புது நாத்து என்ற படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. சுகன்யா, நெப்போலியன் ஆகியோர் தமிழ் சினிமாவில் அறிமுகமான இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து மனத்துடன் பாரதிராஜா இயக்கியிருந்தார்.

படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில், இந்த படத்தில் இடம் பெற்ற, கருத்தமச்சான் பாடலை, கவிஞர் முத்துலிங்கம் எழுத, எஸ்.ஜானகி பாடலை பாடியிருந்தார். இளையராஜா இசையில் வெளிவந்த இந்த பாடலில் உருமி முதல் முறையாக பயன்படுத்தப்பட்டிருக்கும். இப்போது பல பாடல்கள் வெளியானாலும், பழைய பாடல்கள் ட்ரெண்ட் ஆக முக்கிய காரணம் கிராமத்து கதையம்சம் மற்றும் பாடலின் வரிகள் தான்.

இன்றைக்கு வெளியாகும் படங்கள், நமது பாரம்பரியத்தை பிரதிபலிக்க முடியாமல், ஏதோ சில வார்த்தைகளை வைத்து முடித்துவிடுகிறார்கள். இதனால் இந்த பாடல்கள் நமது கவனத்தை ஈர்ப்பதில்லை. அப்படியே ஈர்த்தாலும் ஒரு வாரத்திற்கு மேல் அதன் மீதான ஈர்ப்பு குறைந்து விடுகிறது. ஆனால் பழைய பாடல்கள், பாரம்பரியத்தின் அடையாளமாக நிலைத்து நிற்கிறது என்று கூறியுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Isaignani Ilayaraja Bharathiraja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment