இந்தியாவுக்காக தனது மகன் 5 தங்கப்பதங்களை வென்றுள்ளதாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள நடிகர் மாதவன், மகன் தொடர்பான சில புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்திய சினிமாவின் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் மாதவன், தற்போது ஜி.டி.நாயுடுவின் வாழக்கை வரலாறு தொடர்பான படத்தில் நடித்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் சித்தார்த் நயன்தாராவுடன் டெஸ்ட் என் ஸ்போர்ஸ் தொடர்பான படத்தில் நடித்து வருகிறார். நடிப்பில் பிஸியாக இருந்தாலும் மாதவன் அவ்வப்போது தனது மகனுடன் நேரத்தை கழித்து வருகிறார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் மாதவன் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட முக்கிய பதிவுகளை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தனது மகன் 5 தங்கப்பதக்கங்களை இந்தியாவுக்காக பெற்றள்ளார் என்ற பெருமையுடன் அவர் தனது மகனின் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் மாதவன் மகன் வேதாந்த் மாதவன் ஒரு நீச்சல் வீரர். இந்தியாவுக்காக பல போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் தங்கப்பதங்கங்களையும் வென்றுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் மாதவனின் மகன் வேதாந்த் 58வது MILO/MAS மலேசியா இன்வடேஷ்னல் ஏஜ் குழு நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்திய தேசிய கொடி மற்றும் பதக்கங்களுடன் அவர் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
மாதவனின் மனைவி சரிதா பிர்ஜே ஒரு புகைப்படத்தில் வேதாந்துடன் காணப்படுகிறார். புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டு, ஆர் மாதவன் “கடவுளின் கருணையுடனும், உங்கள் எல்லா நல்வாழ்த்துக்களுடனும், இந்த வார இறுதியில் 2023 இல் நடைபெற்ற மலேசிய இன்வடேஷ்னல் ஏஜ் பிரிவு சாம்பியன்ஷிப்பில் 2 பிபிகளுடன் வேதாந்த் இந்தியாவுக்காக 5 தங்கப்பதக்கங்களை (50 மீ, 100 மீ, 200 மீ, 400 மீ மற்றும் 1500 மீ) வென்றுள்ளார் என்று மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நடிகையும் அரசியல் பிரமுகருமாக குஷ்பு சுந்தர் “வாழ்த்துக்கள் மேடி.. வேதாந்திற்கு அதிகமான அன்பு என்று பதிவிட்டுள்ளார். நடிகர் தர்ஷன் குமார் ட்வீட் செய்தபோது, “மனமார்ந்த வாழ்த்துக்கள் பாய் ஜி என்று கூறியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, வேதாந்த் மாதவன் தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் பல வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil