/tamil-ie/media/media_files/uploads/2019/07/This-Week-Movies-Raatchasi-Kalavani-2.jpg)
Raatchasi, Kalavani 2
This Week movie Release: தமிழ் சினிமாவில் நாளை ’ராட்சசி’ மற்றும் ‘களவாணி 2’ என இரண்டு படங்கள் வெளியாகின்றன.
ராட்சசி
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் ராட்சசி படத்தில் நடிகை ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படம் பள்ளிக் கல்வியை மையமாக வைத்து உருவாகியுள்ளது. ஹரீஷ் பெரேடி, பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசை ஷான் ரோல்டன்.
அரசு பள்ளிக்கு புதிதாக வரும் தலைமையாசிரியை கீதா ராணி (ஜோ), அந்தப் பள்ளியை எவ்வாறு மாற்றுகிறார் என்பது தான் கதை. திருமணத்துக்குப் பிறகு தன்னை முதன்மைப் படுத்தும் கதைகளில் நடித்துவரும் ஜோதிகாவுக்கு, ’ராட்சசி’ திரைப்படம் முக்கியமானதாக அமையும் என்கிறார்கள் படக்குழுவினர்.
களவாணி 2
2010-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற களவாணி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் ஏ.சற்குணம் இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியாவே இந்தப் படத்திலும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். சரண்யா பொன்வண்ணன், வினோதினி வைத்யநாதன், இளவரசு, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
தனது வர்ணம் புரொடக்ஷன் மூலம் சற்குணமே களவாணி 2 படத்தைத் தயாரித்திருக்கிறார். மணி அமுதவன், ரொனால்ட் ரீகன், வி2 ஆகியோர் பாடல்களுக்கு இசையமைக்க, நடராஜன் சங்கரன் பின்னணி இசையமைத்துள்ளார்.
இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.