பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
18 வயதிற்கு கீழ் உள்ளவராக இருந்தல் தனுஷ் படம் பார்க்க முடியாது புதுச்சேரி திரையரங்குகளில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைனில் யாரும் பதிவு செய்ய வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் அவரின் 50-வது படம் ராயன். சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷூடன், சந்திப் கிஷான், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்னா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹமான் இசையமைத்துள்ள இந்த படம் நேற்று (ஜூலை 26) பிரம்மாண்டமாக வெளியானது. படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் உள்ளதால் படத்தில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ராயன் படத்தை 18 வயதிற்கு மேல் உள்ளவர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் வார இறுதியான இன்று புதுச்சேரியில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் ஏராளமானவர்கள் திரையரங்கை விட்டு வெளியே அனுப்பினர். கடலூர் புதுச்சேரி சாலையில் இன்று பலர் குடும்பத்துடன் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து ராயன் படம் பார்க்க சென்றனர். அப்போது டிக்கெட் பரிசோதிக்கும் நபர் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் படம் பார்க்க அனுமதி இல்லை என்று கூறியுள்ளார்.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அடையாள அட்டை கேட்கும் திரையரங்கு ஊழியர்கள், 18 வயதுக்குள் இருப்பவர்களை திரையரங்கை விட்டு வெளியே அனுப்பி விட்டு18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே திரைப்படத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் இன்று வார இறுதி நாளான சனிக்கிழமை குடும்பத்துடன் சினிமா பார்க்க வந்தவர்கள் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுடன் வந்த்தால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
ஆன்லைனில் பதிவு செய்த டிக்கெட் இருக்கு பணம் திரும்பத் தரப்படாது என என திரையரங்கம் நிர்வாகம் தெளிவாக தெரிவிக்கின்றனர். பல குடும்பங்கள் ஆன்லைனில் டிக்கெட்டை எடுத்துவிட்டு இதுபோன்று திரும்பச் செல்வது அவர்களுக்கு மனவருத்த்த்தை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“