scorecardresearch

சந்திரமுகியாக மாறிய வடிவேலு… கட்டிப்பிடித்த லாரன்ஸ்… சந்திரமுகி 2 படப்பிடிப்பு நிறைவு

கடந்த 1993-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் மணிச்சித்திரதாழு. மோகன்லால் சுரேஷ்கோபி, ஷோபனா, இன்னோசன்ட் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை பாசில் இயக்கி இருந்தார்.

சந்திரமுகியாக மாறிய வடிவேலு… கட்டிப்பிடித்த லாரன்ஸ்… சந்திரமுகி 2 படப்பிடிப்பு நிறைவு

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், இது தொடர்பான படக்குழுவினர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 1993-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் மணிச்சித்திரதாழு. மோகன்லால் சுரேஷ்கோபி, ஷோபனா, இன்னோசன்ட் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை பாசில் இயக்கி இருந்தார். இந்த படம் மலையாள சினிமாவில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

தொடர்ந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. பி.வாசு இயக்கிய இந்த படத்தில் விஷ்ணுவர்த்தன், சௌந்தர்யா, ரமேஷ் அரவிந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒரிஜினல் மலையாள சினிமாவை விட பெரிய வசூல் சாதனை நிகழ்த்திய ஆப்தமித்ரா 2005-ம் சந்திரமுகி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. பி.வாசுவே தமிழிலும் இயக்கினார்.

ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் பெரிய வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், சந்திரமுகியாக நடித்த ஜோதிகாவின் திரை வாழக்கையில் மறக்க முடியாத படமாக அமைந்தது. இந்நிலையில், 17 வருடங்களுக்கு பிறகு சந்திரமுகி படத்தின் 2-ம் பாகம் தற்போது தயாராகியுள்ளது.

பி.வாசு இயக்கி வரும் இந்த படத்தில், ராகவாலாரன்ஸ் நாயகனாக நடித்து வருகிறார். அவருடன் கங்கனா ரனாவத், ராதிகா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் மூலம் நடிகை லட்சுமி மேனன் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

சந்திரமுகி முதல் பாகத்தில் ஒரு அரண்மனையில் குடும்பத்துடன் குடியேறும் செந்தில் (பிரபு) சந்திக்கும் அமானுஷ்ய விஷயங்கும் அதற்கு மனோத்தத்துவ நிபுணர் சரவணன் (ரஜினிகாந்த்) எப்படி தீர்வு காண்கிறார் என்பதை ஒரு அரண்மனையை சுற்றி நடக்கும் கதையாக அமைக்கப்பட்டிருந்தது. சந்திரமுகி 2 படமும் அதே மாதிரி இருக்குமா அல்லது முற்றிலும் மாறுபட்ட கதையம்சமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema raghava lawrence chandramukhi 2 wrapped up photos viral