ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், ஒரு ஆப்’பில் சுமார் 6 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்னர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாணமாக தயாரித்துள்ள நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெயிலர் படம் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 10) வெளியாக உள்ளது.
இதனிடையே படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழு மற்றும் ரசிகர்கள் என பலரும் தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில், பான் இந்தியா படமாக வெளியாகும் ஜெயிலர் வசூலில் பல சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில், பல இடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஜெயிலர் படத்தின் முன்பதிவு தொடங்கியதில் இருந்து புக் மை ஷோ ஆப்பில், திங்கள்கிழமை வரை மொத்தம் 612,000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான திரைப்பட வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன் வெளியிட்டுள்ள தகவலின்படி சனிக்கிழமையன்று சுமார் 85.53 ஆயிரம் டிக்கெட்டுகளும், ஞாயிற்றுக்கிழமை 233.15 ஆயிரம் டிக்கெட்டுகளும், திங்கட்கிழமை சுமார் 293.33 கே டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தற்போது வரை 664,000 டாலர் மதிப்புள்ள டிக்கெட்டுகளை விற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நெல்சன் திலீப் குமார் இயக்கிய கடைசி படமாக பீஸ்ட், சுமார் 658,000 டாலர் மதிப்புள்ள டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. இதனிடையே வட அமெரிக்க சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் முதல் ஐந்து தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ஜெயிலர் படத்திற்கு சுமார் 828,000 டாலர்கள் அல்லது ரூ 6.86 கோடி மதிப்பிலான டிக்கெட்டுகள் இதுவரை விற்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், ரஜினிகாந்தின் கபாலி ($1.92 மில்லியன் அல்லது ரூ.15.89 கோடி), மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ($1.03 மில்லியன் அல்லது ரூ.8.52 கோடி), ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் நடித்த 2.0 ($982,000 கோடி) மற்றும் ரூ.8.100 கோடி போன்ற படங்களுடன் ஜெயிலரும் இணைந்துள்ளது. இதில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 ($737,000 அல்லது ரூ. 6.09 கோடி) படமும் இடம்பெற்றுள்ளது.
இது தவிர, பெங்களூருவில் காலை 6 மணிக்குத் தொடங்கும் காட்சிக்கான டிக்கெட்டுகள் ரூ.800 முதல் ரூ.1,400 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ரமேஷ் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆகஸ்ட் 10 ஆம் தேதி பெங்களூரில் அதிக எண்ணிக்கையிலான காட்சிகள் ஜெயிலர் படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“