தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்திற்காக அவருக்கு ரூ60 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிப்பில் லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் அக்டோபர் 19-ந் தேதி லியோ படம் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.
சமீபத்தில் வெளியான ஜெயிலர் படம் ரஜினிகாந்த்க்கு பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த மகிழ்ச்சியில் உள்ள நடிகரு ரஜினிகாந்த் அடுத்து, ஜெய்பீம் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் தனது 170-வது படத்தில் நடிக்க உள்ளார். லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், 2024ல் இந்த படம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 'லியோ' படத்தின் வெளியீட்டிற்குப் பிறகுதான் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் ஸ்கிரிப்ட் பணியில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக லோகேஷ் கனகராஜ்க்கு ரூ60 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், 'ஜெயிலர்' படத்தின் வெற்றியில் களமிறங்கும் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மாறியுள்ளார். விரைவில் அவர் நடிப்பில், 'லால் சலாம்' படம் வெளியாக உள்ளது. ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால்சலாம் விளைாட்டு போட்டியை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“