Vettaiyan Movie Reviews: மாஸ் ரஜினிகாந்த்... யூகிக்க முடிந்த திரைக்கதை: வேட்டையன் வெற்றியை பறிக்குமா?

Vettaiyan Movie Reviews Live Updates: ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன் கூட்டணியில் இன்று வெளியாகியுள்ள வேட்டையன் படம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள இந்த பதிவில் இணைந்திருங்கள்

Vettaiyan Movie Reviews Live Updates: ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன் கூட்டணியில் இன்று வெளியாகியுள்ள வேட்டையன் படம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள இந்த பதிவில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vettaiyan OTT Release date Rajnikanth and Amitabh Bachchan tamil news

Vettaiyan Movie Reviews Live Updates: ஜெய்பீம் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் வேட்டையன். ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் 33 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடித்துள்ள இந்த படத்தில், ராணா, பகத் பாசில், மஞ்சு வாரியார், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் மனசிலாயோ பாடல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.

Advertisment

அதேபோல் சமீபத்தில் வெளியான வேட்டையன் படத்தின் டிரெய்லர் சிறப்பாக இருந்தாலும், ரஜினி ரசிகர்களை அந்த டிரெய்லர் திருப்திப்படுத்தவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தது. இதனிடையே ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு வேட்டையன் படம் இன்று (அக்டோபர் 10) வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்து ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். 

  • Oct 10, 2024 14:54 IST

    தனித்துவமான ஸ்டைலிஸ்டிக் நடிப்பு - ரசிகர் புகழாரம் 

    "சூப்பர் ஸ்டார் ⭐️ ரஜினிகாந்த் தனது தனித்துவமான ஸ்டைலிஸ்டிக் 🕶️ செயல்திறன் நடிப்பின் சரியான சமூக கல்வி சூழல் திரைப்படம். ஃபஹத் பாசில் அற்புதமான நடிப்பு, ஈர்க்கக்கூடிய மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் பாத்திரம்." என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். 



  • Oct 10, 2024 14:50 IST

    ரஜினியின் வேட்டையான் ஓ.டி.டி உரிமம் யாருக்கு?

    நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஓ.டி.டி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ  ஸ்ட்ரீமிங் தளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.



  • Advertisment
    Advertisements
  • Oct 10, 2024 14:34 IST

    நடிகர் சூர்யா வாழ்த்து 

    நடிகர் ரஜினி நடித்து வேட்டையன் படம் வெற்றி பெற, நடிகர் சூர்யா  தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். 



  • Oct 10, 2024 14:31 IST

    திரைப்பட தயாரிப்பாளர் ஜி தனஞ்செயன் வாழ்த்து 

    நடிகர் ரஜினி நடித்து வேட்டையன் படம் வெற்றி பெற, திரைப்பட தயாரிப்பாளர் ஜி தனஞ்செயன் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். 



  • Oct 10, 2024 14:17 IST

    கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து 

    நடிகர் ரஜினி நடித்து வேட்டையன் படம் வெற்றி பெற, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். 



  • Oct 10, 2024 14:17 IST

    நெல்சன் திலீப்குமார் வாழ்த்து 

    நடிகர் ரஜினி நடித்து வேட்டையன் படம் வெற்றி பெற, ஜெயிலர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். 



  • Oct 10, 2024 14:09 IST

     அதிகாலையில்  ரூ.4.91 கோடி வசூலித்த வேட்டையன் 

    ரஜினி நடிப்பில் வெளிவந்துள்ள வேட்டையன் படம் இந்திய அளவில் அதிகாலை காட்சிகள் மூலம் ரூ.4.91 கோடி வசூலித்துள்ளது சாக்னிக்.காம் (sacnilk.com) தெரிவித்துளளது. "வேட்டையன் அனைத்து மொழிகளிலும் அதன் முதல் நாளில் சுமார் 4.91 கோடி இந்தியாவில் வசூலித்து இருக்கிறது." என்று கூறியுள்ளது. படத்தின் இன்றைய வசூல் இரவு 10 மணிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

     



  • Oct 10, 2024 12:57 IST

    குற்ற விசாரணை திரில்லர் படம்  - வேட்டையன் படத்துக்கு அமோக வரவேற்பு 

    "போலி என்கவுன்டர்கள் மற்றும் கல்வி மோசடி போன்ற சில முக்கிய தலைப்புகளை எடுத்துரைக்கும் குற்ற விசாரணை திரில்லர் படம் வேட்டையன்" என்று ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.  



  • Oct 10, 2024 10:35 IST

    ரசிகர்களுடன் படம் பார்க்கும் இயக்குனர் ஞானவேல்

    ரஜினியின் 'வேட்டையன்' படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகி இருக்கிறது. திரையரங்குகளில் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன்  இயக்குனர் ஞானவேல், நடிகை அபிராமி படம் பார்த்து வருகிறார்கள். 



  • Oct 10, 2024 10:10 IST

    ‘வேட்டையன்’ படத்தை காண திரையரங்கம் வந்த தனுஷ்!

    நடிகர் ரஜினிகாந்த்தின் ‘வேட்டையன்’  திரைப்படத்தை காண சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு நடிகர் தனுஷ் வந்துள்ளார்.  



  • Oct 10, 2024 09:36 IST

    வேட்டையன் - விறுவிறுப்பு 

    தவறாக செயல்படுத்தப்படும் என்கவுண்டர் தொடர்பான வலுவான திரைக்கதை உள்ளது. விறுவிறுப்பான திரைக்கதை, ரஜினி மற்றொரு சிறப்பான திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். 

    அனிருத் இசை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். பகத் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் என மலோசியா டிக்கட்ஸ் ரிவ்யூ அளித்துள்ளது. 4/5 என ரேட்டிங் வழங்கியுள்ளது. 



  • Oct 10, 2024 09:12 IST

    சண்டை காட்சிகள் மற்றும் இடைவேளை சிறப்பு

    ஆரம்பம் முதல் இடைவேளை வரை ப்ரேம் மிக நன்றாக அமைக்கப்பட்டுள்ளது. அறிமுக காட்சிகள். BGM,  சண்டை காட்சிகள் மற்றும் இடைவேளை எல்லாம் சரியாக வேலை செய்ததாக தெரிகிறது. மிக அருமையான முதல் பாதி, எங்கும் மந்தமான தருணங்கள் இல்லை அனைத்துமே ரசிகர்களுக்கான தருணங்கள் தான்.



  • Oct 10, 2024 09:09 IST

    மறுக்கமுடியாத ராஜா பஹத் பாசில்

    நீண்ட நாட்களாக இதை பார்க்கவில்லை.. தலைமையிலான ஒட்டுமொத்த நடிகர்களும் என்ன ஒரு அற்புதமான நடிப்பு.  மறுக்கமுடியாத ராஜா பஹத் பாசில், என்ன ஒரு அற்புதமான நடிகர் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இந்த தசாப்தத்தின் திரைப்படத்தை எடுத்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.



  • Oct 10, 2024 09:06 IST

    ஒரு நல்ல செய்தியை தெளிவாக சொல்லியிருக்கிறார்

    மேலும் ஒரு நல்ல செய்தியை தெளிவாக சொல்லியிருக்கிறார் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். 



  • Oct 10, 2024 08:49 IST

    உணர்வுப்பூர்வமாக மிகக் குறைவான தாக்கம்: பிரபலம் கொடுத்த வேட்டையன் ரிவ்யூ

    கிறிஸ்டோபர் கனகராஜ் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தின் முதல் விமர்சனத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி வேட்டையான்  தலைவர் எப்போதும் பயங்கரமானவர். பஹத் பாசில் கேரக்டர் சூப்பர் வேடிக்கையாக உள்ளது. அமிதாப், ராணா கேரக்டர்கள் வவலுவாக இல்லை. ஹண்டர் பி.ஜி.எம். மற்றும் மனசிலயோ பாடல் சூப்பர். விரும்பத்தக்க சண்டை காட்சிகள். நல்ல கதைக்களம், ஆனால் சிதறிய திரைக்கதை & வழக்கமான காட்சிகள் உணர்வுப்பூர்வமாக மிகக் குறைவான தாக்கத்தை கொடுக்கிறது என்று கூறியுள்ளார்.



  • Oct 10, 2024 08:45 IST

    மிகப்பெரிய தமிழ் ஓப்பனராக அமையுமா வேட்டையன்?

    இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் படி, ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் ஏற்கனவே பாக்ஸ் ஆபிஸில் ரூ 22.86 கோடி வசூலித்துள்ளது. இந்த வருடத்தின் மிகப்பெரிய தமிழ் ஓப்பனராக இப்படம் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 இந்தியாவில் முதல் நாளில் ரூ.26 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



  • Oct 10, 2024 08:44 IST

    ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள வேட்டையன் படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி

    அக்டோபர் 10 மற்றும் 11 ஆகிய இரு தினங்களில் வேட்டையன் படத்திற்கு ஐந்து காட்சிகளை திரையிடலாம் என தமிழக அரசு தியேட்டர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக விஜய் நடித்த கோட்  படமும் தொடக்க நாளில் ஐந்து காட்சிகள் திரையிட சிறப்பு அனுமதி பெற்றது.



  • Oct 10, 2024 08:42 IST

    சட்டம் ஒழுங்கின் மீதான நம்பிக்கை தான் வேட்டையன்: ரசிகரின் எக்ஸ் பதிவு

    உடனடி மனநிறைவு உலகில், போலீஸ் என்கவுண்டர்கள் சரியான விஷயமாக உணரலாம். செழித்து வரும் ஜனநாயகத்தில் நீண்ட கால நீதிக்கு சட்டம் மற்றும் ஒழுங்கின் மீதான நம்பிக்கையின் முக்கியத்துவத்தை வேட்டையன் அழகாக எடுத்துரைக்கிறார் என்று ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.



  • Oct 10, 2024 08:12 IST

    வேட்டையன் முன்பதிவு விபரம்

    வர்த்தக கண்காணிப்பாளர் சாக்னிலிங் படி, வேட்டையன் படம் இந்தியாவில் முன்பதிவு மூலம் ரூ 15.22 கோடி வசூலித்துள்ளதாகவும், தமிழ் பதிப்பு ரூ.13.78 கோடியும், தெலுங்கு மற்றும் ஹிந்தி பதிப்புகள் முறையே ரூ.1.25 கோடியும், ரூ.17.40 லட்சமும் வசூலித்தது. 300 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.



  • Oct 10, 2024 08:03 IST

    வேட்டையன் முதல் விமர்சனம்

    முதல் அறிக்கைகள் சூப்பர் தீம், நடிப்பு அடிப்படையிலான படம் ரஜினிகாந்த் அமிதாப்பச்சன் ஆதிக்கம் செலுத்திய படம். ஃபஹத்பாசில் மற்றும் ராணா கேரக்டர் நன்றாக உள்ளது. பேச்சு இடைவெளி, படத்தின் 2வது பாதி ஹைலைட். ஒரு செய்தியுடன் நல்ல திருப்பம்" என்று பதிவிட்டுள்ளார்.



  • Oct 10, 2024 07:24 IST

    முதல் பாதிக்கு தனியா ஒரு அவார்டு கொடுங்க: வேட்டையன் ரிவ்யூ

    வேட்டையன் படத்தின் முதல் பாதிக்கு தனியா ஒரு அவார் கொடுங்க என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

    மாலா முதல் பாதி குடுங்க டா ஒரு விருது தானியா.. வேட்டையன் ஒவ்வொரு பிரேமும் வெடிக்கும். இந்த படம் தவறு செய்யும் பூமியில் எந்த வழியும் இல்லை. இனி இரண்டாம் பாதி தலைவர் பரபிரம்மத்திற்குக் குறைவாகத் தெரியவில்லை. ஞானவேல் எதிர்பாராதது செய்துள்ளார் முழு அனுபவத்திற்காக காத்திருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

     



  • Oct 10, 2024 07:22 IST

    வேட்டையன் முதல் பாதி சூப்பர்: அப்போ 2-வது பாதி?

    வேட்டையன் முதல் பாதி சூப்பர். முதல் 20 நிமிடங்கள் ரஜினிகாந்த் மாஸ் செய்துள்ளார். அரை மணி நேரத்துக்குப் பிறகு ரேஸை நோக்கி நகர்கிறது குற்ற விசாரணை நிறைந்த திரைக்கதை. அனிருத் பின்னணி இசை, பாடல் மிகவும் நன்றாக உள்ளது. உணர்ச்சிகரமான காட்சிகள் நன்றாக இணைக்கப்பட்டுள்ளன. துஷாரா ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். பஹத் பாசில் சூப்பர். வேடிக்கையான முதல் பாதி ஒரு சுவாரஸ்யமான குறிப்புடன் முடிகிறது என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.



Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: