ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மங்களூரில் தொடங்கியுள்ள நிலையில், படப்படிப்பு தளத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிவராஜ்குமார் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், அண்ணாத்த படத்திற்கு பிறகு ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். டாக்டர் பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், மலையாள நடிகர் மோகன்லால், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் மூலம் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தமிழில் அறிமுகமாகிறார். ,ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ராஜஸ்தான் புறப்பட்டு சென்றது. சில நாட்கள் அங்கு ஷூட்டிங் நடைபெற்ற நிலையில் தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மங்களூரில் தொடங்கியது.
இதில் ரஜினிகாந்த் மற்றும் சிவராஜ்குமார் இருவரும் இணையும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் ரஜினியும், சிவராஜ்குமாரும் சாதாரணமாக அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படத்தில், இரண்டு நட்சத்திரங்களும் சாதாரண உடையில் காணப்படுகின்றனர்.

ரஜினி டி-சர்ட் மற்றும் ‘லுங்கி’ அணிந்த நிலையில், சிவராஜ்குமார் டி-சர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்திருந்தார். இருவரும் கேஷ்யூவலாக பேசிக்கொண்டிருக்கின்றனர். ரஜினிகாந்த் மற்றும் சிவராஜ்குமார் இருவருக்கும் இடையே நல்ல உறவு இருந்தாலும், இருவரும் இதுவரை இணைந்து படங்களில் நடித்ததில்லை. தற்போது ஜெயிலர் படத்தின் மூலம் இருவரும் இணைந்துள்ளனர். இந்த படத்தில் சிவராஜ்குமார் தவிர, இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா பாட்டியா, விநாயகன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் ரவிச்சந்தர் இசையில் உருவாகியுள்ள இப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது. இதற்கிடையில், சிவராஜ்குமார் தனது கன்னட படமான வேதாவின் தெலுங்கு டப்பிங் பதிப்பன் ப்ரமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறார். மேரும் ஜெயிலர் படத்தை தவிர, தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil