/indian-express-tamil/media/media_files/81Ft5KmFJ8orHktTq5wX.jpg)
வேட்டையன் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன்
பெரிய இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இருவரும் வேட்டையன் படத்தில் இணைந்துள்ள நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், தற்போது டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மஞ்சு வாரியார். பகத் பாசில், ராணா, அமிதாப் பச்சன், ரித்திகா சிங் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், அனிருத் இசையமைத்து வருகிறார்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கிய வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு, தூத்தக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மும்பை சென்ற படக்குழு அங்கு ரஜினிகாந்த் அமிதாப் பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் ரஜினிகாந்த் அனிருத் இருவரும் நடனமாடும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் கசிந்தது.
The Titans of Indian Cinema! 🌟 Superstar @rajinikanth and Shahenshah @SrBachchan grace the sets of Vettaiyan in Mumbai, with their unmatched charisma. 🤩🎬#Vettaiyan 🕶️ pic.twitter.com/MDkQGutAkb
— Lyca Productions (@LycaProductions) May 3, 2024
அதனைத் தொடர்ந்து தற்போது படப்பிடிப்பு தளத்தில் அமிதாப் பச்சன் – ரஜினிகாந்த் இருவரும் ஒன்றாக நிற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மும்பையில் நடைபெற்ற வேட்டையன் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை லைகா நிறுவனம் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரைவலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.