1970-களில் பாலிவுட் சினிமாவை விட தென்னிந்திய திரைப்படங்கள் மிகவும் தொழில்முறை சினிமாவாக இருந்தது என்று பழம்பெரும் நடிகரும், முதன்முதலில் 1970 களில் இந்தி திரைப்படங்களில் கோல் மால் மற்றும் சோட்டி சி பாத் போன்ற படங்களின் மூலம் பாராட்டைப் பெற்ற மூத்த நடிகர் அமோல் பலேகர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தி திரைப்படங்களில் சரியான நேரத்தில் வந்து நடித்து தருவது மூன்று நடிகர்கள் மட்டுமே இருந்ததாகவும், அவர்களில் நானும் ஒருவர் என்றும் தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
ராஜ்ஸ்ரீ அன்பிளக்டுடன் பேசிய அமோல் பலேகர் “எங்கள் காலத்தில் மூன்று நடிகர்கள் மட்டுமே சரியான நேரத்தில் தோன்றினர், அந்த பட்டியலில் நான் மிகவும் ஜூனியர். முதலில் தேவ் ஆனந்த், காலை 9 மணிக்குத் தேவைப்பட்டால், 9 மணிக்குக் சரியாக வந்துவிடுவார். இரண்டாவது அமிதாப் பச்சன், ஒவ்வொரு முறையும், சரியான நேரம் அல்லது அதற்கு முன்பே வந்துவிடுவார். மூன்றாவது நான் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து ஒருமுறை அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருக்கும் அதே ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்ததை நினைவு கூர்ந்த அமோல் பச்சன் எப்போதுமே சரியான நேரத்திற்கு வருவார், ரஜினிகாந்த் சரியான நேரத்திற்கு முன்பே வருவார். அங்கே ஸ்பாட் பாய்ஸ், லைட் பாய்ஸ் என்று வந்து உட்கார்ந்து கொள்வார். அவர்களுடன் பெஞ்சில் அமர்ந்து பேசுவார். அவர்களுடன் தேநீர் அருந்துவார். மேலும் குறிப்பிட்ட நேரத்தில், 9 மணிக்கு ஷிப்ட் என்றால், 9 மணிக்கு இயக்குனரிடம் சென்று, ‘ஆமாம் சார், நான் தயாராக இருக்கிறேன்’ என்று அவர் சொன்னதாக கூறினார்.
இந்தித் திரையுலகில் தாமதமாக வருவது ஒருவரின் நட்சத்திர அந்தஸ்தின் அடையாளமாக மாறிவிட்டதாக நினைவு கூர்ந்த அமோல் “பெரிய நட்சத்திரம் எவ்வளவு தாமதமாக வருவார், அல்லது தாமதமாக வருபவரே பெரிய நட்சத்திரம் என்று இந்தித் திரையுலகில் ஒரு போக்கு இருந்தது. இது மிகவும் தொழில்சார்ந்ததாக நான் கண்டேன்,” இந்த தவறான போக்குகள் எதுவும் தென் திரைப்படத் தொழில்களில் இல்லை என்று அவர் மேலும் கூறினார், “
பல்வேறு பிராந்திய படங்களில் பணியாற்றியுள்ள அமோல் அந்த சூழல் மிகவும் தொழில்முறையாக இருப்பதைக் தெரிந்துகொண்டார். “தென்னிந்தியத் திரையுலகம் மிகவும் தொழில்முறையாகவும், மிகச் சிறந்த வசதியுடனும் இருப்பதை நான் கண்டேன், அதை எப்படிச் சொல்வது? என்னிடம் இன்னும் நிறைய சுவாரஸ்யங்கள் உள்ளன. அங்குள்ள கலாச்சாரம் அதுவல்ல. அவர்கள் அனைவரும் மிகவும் அடக்கமானவர்கள், வேலை செய்வதற்கு மிகவும் நல்லவர்கள். நான் அங்கு வேலை செய்வதை ரசித்தேன் என கூறியுள்ளர்ர்.
இளைய தலைமுறை நடிகர்கள் மிகவும் தயாராகி, சரியான நேரத்தில் வந்து, அவர்களின் பணிகளை அறிந்துகொள்வதால், இந்தித் திரையுலகின் கலாச்சாரம் இப்போது வியத்தகு முறையில் மாறிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமோல் பலேகர் இந்தியில் நடித்த கோல் மால் திரைப்படம் தமிழில் திள்ளுமுள்ளு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அதில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“