தனது குடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். தற்போது வேட்டையன் படத்தில் பிஸியாக நடித்து வரும் இவர், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சினிமாவில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது தனது குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கும் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் ஹோலி பண்டியைகை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
இதில் ஒரு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த போட்டோவில் ரஜினிகாந்தை காணோமே என்று கேட்டு வருகின்றனர். அதே சமயம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் கவனம் ஈர்த்துள்ள இந்த புகைப்படத்தின் மூலம் சௌந்தர்யா ரஜினிகாந்த் முதல்முறையாக தனது இளையமகன் வீர் முகத்தை காட்டியுள்ளார். பிறந்தது முதல் தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த சௌந்தர்யா தற்போது வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களில் வீர் முகத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அப்படியோ அவரது அண்ணன் வேத் மாதிரியே இருக்கிறார் என்று கூறி வருகின்றனர். அதேபோல் இந்த புகைப்படத்தில் சௌந்தர்யாவின் கணவர் விசாகன், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் கழுத்தில் கைபோட்டு போஸ் கொடுத்துள்ளார். அதே சமயம் அவரது மகன்கள் இருவருமே இந்த புகைப்படத்தில் இடம்பெறவில்லை.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறிய புன்னகையுடன், கலர் பொடிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார். அருகில் வெள்ளை நிற சோபா இருக்கும் நிலையில், நீங்கள் வெள்ளை நிற சோபா வைத்துக்கொண்டு தான் ஹோலி கொண்டாடுவீங்களா என்று கேட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணைதய்தில் வைரலாகி வரும் நிலையில், தனுஷ் இல்லையே என்று அவரது ரசிகர்களும், ரஜினியை இப்படியே மகிழ்ச்சியாக வைத்திருங்கள் என்று அவரது ரசிகர்களும் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“