/indian-express-tamil/media/media_files/2025/08/01/coolie-rajiniakth-2025-08-01-16-29-14.jpg)
ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் அகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே தற்போது இந்த படத்தின் ப்ரீமியர் காட்சியை பார்த்த பலரும் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் நடைபெற்ற சிறப்பு காட்சி திரையிட்ட பிறகு, படத்தின் ஆரம்பக்கட்ட விமர்சனங்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன. சமீபத்தில் நடந்த ப்ரீமியர் காட்சியில் படம் பார்த்த ரசிகர்கள் பலரும், படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
அவர்களில் ஒரு ட்விட்டர் பயனர், படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கேரக்டர் குறித்தும், விரிவாக ஒரு விமர்சனத்தைப் பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்தின் நடிப்பு குறித்து அவர், கபாலி'க்குப் பிறகு சிறந்த நடிப்பு என்றும், நடிகர் நாகார்ஜுனா இந்தப் படத்தின் "முதுகெலும்பு" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாலிவுட் நடிகர் அமீர் கானின் சிறப்புத் தோற்றம் "திரையரங்கையே ஒரு மைதானமாக மாற்றியது" என்று அவரது நடிப்புக்கு உச்சகட்டப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
#Coolie - INSIDE REPORTS: MASS 🔥
— ALEX (@OnlyCinema_post) August 5, 2025
LOKI COOKED 🧨🔥#Rajinikanth𓃵 Best Perfomance Loading After Kabali ✅#ShrutiHaasan is Main Highlight of Film ✅#Nagarjuna is Backbone of This Film ✅❤️🔥#AamirKhan Cameo Will Turned Theatre Into Stadium💥🥵
There is A Big Surprise😉
மற்றொரு விமர்சகர், 'கூலி' ஒரு "அற்புதமான" திரைப்படம். ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், பூஜா உபேந்திரா உட்பட அனைத்து நடிகர்களும் தங்கள் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆரம்பக்கால விமர்சனங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளன. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதன் முன்பதிவு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டது. அதே நாளில், ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள 'வார் 2' படமும் வெளியாகிறது.
Coolie Movie Review #Coolie#CoolieReview #AamirKhan #Rajinikanth #NagarjunaAkkineni #ShrutiHaasanHot #LokeshKanagaraj #Anirudh pic.twitter.com/LIZafzqzlU
— Varinder Sinngh (@varindersingh24) July 15, 2025
ஆனாலும், முன்பதிவில், 'கூலி' ஏற்கனவே பெரும் எண்ணிக்கையில் வசூல் செய்து வருகிறது. கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள சில திரையரங்குகளில் ஆகஸ்ட் 14 அன்று காலை 6 மணிக்கு முதல் காட்சி தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரைபிடப்பட உள்ளது. மேலும், இந்தப் படத்துக்கு சென்சார் போர்டு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. எனவே, 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே படத்தைப் பார்க்க முடியும். பல திரையரங்குகளில் இதுகுறித்த அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
வெளிநாடுகளிலும் 'கூலி'யின் மீதான ஆர்வம் தீவிரமாக உள்ளது. இங்கிலாந்தில் தணிக்கைத் துறையால் எந்தவொரு காட்சி வெட்டும் இன்றி 'கூலி' அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கு முதல் காட்சி இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. துபாயில், காலை 9:30 மணிக்கு காட்சி தொடங்கும் நிலையில், மற்ற காட்சிகளின் நேரங்களும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூலி திரைப்படம், முன்பதிவில், ஒரு மிகப்பெரிய தொடக்கத்தைக் கொடுக்கும் எனத் தெரிவிக்கின்றன. ஏற்கனவே முன்பதிவுகளில் 2 மில்லியன் டாலரை தாண்டி வசூல் செய்துள்ளது. இதில், வட அமெரிக்காவில் மட்டும் 1.3 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளதாக விநியோகஸ்தர் பிரத்யங்கிரா சினிமாஸ் தெரிவித்துள்ளது. 50,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துள்ளதால், இது ஒரு புதிய சாதனையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்தின் நடிப்பில், ஆமிர் கான், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா மற்றும் ஸ்ருதி ஹாசன் போன்ற நட்சத்திரப் பட்டாளம் இணைந்துள்ள 'கூலி', இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.