/indian-express-tamil/media/media_files/2025/08/02/coolie-rajinikan-2025-08-02-20-12-31.jpg)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரஜினிகாந்த் 70 வயதை கடந்திருந்தாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதன் காரணமாக அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் ரஜினிகாந்த், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்துள்ளார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் இயக்கும் 6-வது படம் இதுவாகும்.
இந்த படத்தில் நாகர்ஷூனா, சவுபின் சபீர், உபேந்திரா, சத்யராஜ், அமீர்கான் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில், கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது, படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் மோனிகா பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Seems, it's Real life reference..🔥🔥@rajinikanth @ikamalhaasan ❤️❤️#CoolieUnleashed pic.twitter.com/RyoOcfjIoo
— Sowmiya (@Sowmi_here) August 2, 2025
🔥🔥🔥🔥🔥 Goosebump overloaded. My God...Can't wait to experience. Total bliss 😍😍😍😍😍 #Coolie #CoolieTrailer
— Karthik (@meet_tk) August 2, 2025
Tharamaana sambavam by Loki.
— Redman (@redmanDgr8) August 2, 2025
Vikram maariye venum kettu vaangirukaar Rajini🤣
Visuals grandeur.
Sure shot close to 1000cr if good screenplay
அதேபோல் அவ்வப்போது வெளியாகும் கூலி படத்தின் அப்டேட்கள், தொடர்ந்து படத்தின் மீதூன எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 14-ந்தேதி கூலி படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதனிடையே தற்போது கூலி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. நாகர்ஜூனாவின் குரலுடன் தொடங்கும் இந்த டிரெய்லரில் ரத்தம் தெறிக்கூடிய காட்சிகள் அதிகம் உள்ளது.
Verithanam Intha Deva pathi therinjikittey vilaydittu irukka 🔥🔥🔥
— YashaPrem (@UchihaThamizhan) August 2, 2025
Actually Rajini seems misfit for this kind a film.
— Redman (@redmanDgr8) August 2, 2025
Vijay or Ajith would’ve been classier
Trailer La onnum
— velan (@billabilli1234) August 2, 2025
Illa Movie varatum
Papom 🙂
Very slow not racy
டிரெய்லரை பார்க்கும்போது சத்யராஜ் – ரஜினிகாந்த் நெருங்கிய நண்பாகளாக இருக்க வாய்ப்பு உள்ளது. சத்யராஜூன் மகள் தான் ஸ்ருதிஹான் என்பதும் சத்யராஜை கொலை செய்துவிடுதால், அதற்கு பழிவாங்க ரஜினிகாந்த் களத்தில் இறங்குவது போல டிரெய்லரின் காட்டப்பட்டுள்ளது. வழக்கமான ஆக்ஷன் மசாலா கலந்த இந்த டிரெய்லர் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் ஒரு ரசிகர் பக்கா மாஸ்… தலைவன் எறங்குறான் சரித்திரம் படைக்கிறான் என்று பதிவிட்டுள்ளார்.
Leo Trailer cut is still the best trailer from Lokesh. Vikram was also good.
— Kerala Boxoffice Stats (@kboxstats) August 2, 2025
மீண்டும் ஒரு நட்பின் அதிகாரம்
— suriyathalapathi (@suriyathalapat) August 2, 2025
படத்துல சம்பவம் இல்ல சம்பவம் தான் படமே ⭐⭐⭐🔥🔥🔥🔥🔥
Ithu pakka mass’u ma… thalaivan eranguran sarithiram padaikkiraan 🔥🔥
— Tweet 💸 Tweak (@XBankBoyTweet) August 2, 2025
மற்றொருவர், தரமான சம்பவம் செய்துள்ளார் லோகேஷ், விக்ரம் மாதிரி வேண்டும் என்று கேட்டு வாங்கியிருப்பார் போல ரஜினிகாந்த், 1000 கோடி கண்ஃபார்ம் என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் டிரெய்லரில் ஒன்னும் இல்லை. மூவி வரட்டும் பார்ப்போம் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.