Advertisment

ரஜினிக்கு எதிராக கோஷம்... தியேட்டர் வாசலில் விஜய் ரசிகர் மீது தாக்குதல் : வைரல் வீடியோ

கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார் என்பது குறித்து ரஜினி – விஜய் ரசிகர்களிடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது

author-image
WebDesk
New Update
Rajinikanth Vijay

தியேட்டரில விஜய் ரசிகர் மீது தாக்குதல்

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வரும் நிலையில், விஜய் ரசிகர் ஒருவரை ரஜினி ரசிகர்கள் தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் படமாக வெளியான ஜெயிலர் படம் ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ள நிலையில், இன்றைய தினத்தை திருவிழா போல் அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார் என்பது குறித்து ரஜினி – விஜய் ரசிகர்களிடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கூறிய காக்கா, கழுகு கதை பெரும் வைரலாக பரவியது. இதில் ரஜினிகாந்த் காக்கா என்று நடிகர் விஜய்யை தான் குறிப்பிடுகிறார் என்று ஒரு தரப்பினர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக ரஜினி – விஜய் ரசிகர்களிடையே சமூகவலைதளங்களில் மோதல் வெடித்துள்ள நிலையில்,  இன்று ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரஜினி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் ரசிகர் ஷோ இல்லை என்பதால் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. இதில் சென்னையின் பிரபல திரையரங்கு ஒன்றில் ஜெயிலர் படம் பார்க்க விஜய் ரசிகர்கள் வந்துள்ளனர்.

அப்போது தியேட்டரில் ஒருவர் ரஜினி ஒழிக என்று கோஷமிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரஜினிகாந்த் ரசிகர்கள் அந்த ரசிகர்கரை கடுமையாக தாக்கியுள்ளனர். தியேட்டர் வாசலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதி இணையத்தில் வெளியாகி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர்ஸ்டார் பட்டம் தொடர்பான இதுவரை சமூகவலைதளங்களில் மோதி வந்த ரசிகர்கள் இப்போது நேரடி மோதிலில் இறங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment