பல ஆக்ஷன் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த், திடீரென இயக்குனராக மாறி ஒரு பாடலுக்கு டியூன் கேட்டுள்ளார். அந்த பாடல் இப்போதும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. அந்த பாடல் என்ன? எந்த படத்தில் என்பதை பார்ப்போமா?
Advertisment
1975-ம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகமாக ரஜினிகாந்த், 80-களில் முன்னணி நடிகராக உயர்ந்து வெற்றிப்படங்களை கொடுக்க தொடங்கினார். இவரின் படங்கள் வரிசையாக வெற்றியை பெற்று வநத நிலையில், இடையில் படத்தின் தயாரிப்பாளராகவும் மாறியவர் ரஜினிகாந்த். மாவீரன் படத்தின் இணை தயாரிப்பாரளாக களமிறங்கினார்.
மாவீரன் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்ததாக தகவல்கள் வெளியானது. அதன்பிறகு, வள்ளி என்ற படத்தை தயாரித்து கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு கதை எழுதியவரும் ரஜினிகாந்த் தான். படத்தை நடராஜன் என்பவர் இயக்கியிருந்த நிலையில், இசைமைப்பாளர் இளையராஜா படத்திற்கு இசையமைத்திருந்தார். 1993-ம் ஆண்டு வெளியான இந்த படத்தின் மூலம் நடிகை பிரியா ராமன் தமிழ் சினிமாவில் அறிமுகமானர்.
ஒரு பெண் தன்னை காதலித்து, பலாத்காரம் செய்த ஒருவனை திரும்ப வரவழைத்து, கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்வது தான் இந்த படத்தின் கதை. படத்தில் வடிவேலு காமெடி நடிகராக நடித்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக இந்த படத்தில் வரும் என்னுள்ளே என்னுள்ளே என்ற பாடல் இன்றைக்கும் கேட்கும்போது சுகமான ராகமாக இருக்கும்.
இந்த பாடலுக்காக தயாரிப்பாளரும் கதாசிரியருமான ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜாவிடம் பாடலுககான சூழ்நிலையை, ஒரு கைதேர்ந்த இயக்குனர் போல், விவரித்து கூறியுள்ளார். அவர் சொன்னதை கேட்ட பிறகே தனக்கு இந்த டியூன் போட வேண்டும் என்று தோன்றியதாக இளையராஜாவே ஒரு மேடையில் கூறியுள்ளார். இந்த பாடலுக்கு முன்பு வரை மென்மையாக சென்றுகொண்டிருக்கும் திரைக்கதை இந்த பாடலுக்கு பின், வைலன்சாக மாறும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“