ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களில் படம் ஆன்லைனில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள படம் ஜெயிலர். இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. சுதந்திர தின விடுமுறையை குறிவைத்து ஜெயிலர் படம் உலகம் முழுவதும் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஜெயிலர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரஜினி ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக ஜெயிலர் படம் திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களில் ஆன்லைன் பைரசிக்கு பலியாகிவிட்டது. ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களில் சட்டவிரோதமாக டொரண்ட் தளங்களில் வெளியிடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் சினிமா துறையில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், பைரசி தளங்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் இது மாதிரியான ஆன்லைன் வெளியீடுகள் பெரிய பட்ஜெட் படத்திற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இந்த சிக்கலுக்கு தற்போது ஜெயிலர் படமும் சிக்கிக்கொண்டுள்ளது. இதனிடையே ஜெயிலர் படத்தின் இந்த சிக்கலுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
சினிமாவின் வளர்ச்சியை அதிகரிக்க ரசிகர்களை தக்கவைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். ஆனால் ஒரு பகுதி ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை ரசிக்க இந்த மாதிரியான பைரசி இணையதளங்களுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். இந்த நிலை சினிமா துறைக்கு பெரும் பாதிப்பையும் வளர்ச்சியை தடுக்கும் ஒரு தடையாகவும் மாறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“