நடிகர் ரஜினிகாந்த் நடித்து நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள ஜெயிலர் படம் இன்று வெளியாகியுள்ளது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த மற்றும் தர்பார் போன்ற படங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில், ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ரஜினிகாந்த் படங்களின் எதிர்பார்ப்பும் வசூலும் எப்போதும் சோடை போவதில்லை என்றாலும் முந்தைய படங்களின் வெற்றியையோ வசூலையோ ஈட்டாமல் போனால் அது பல்வேறு சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் கிளப்பிவிட்டு சதுரங்கம் ஆடவைக்கிறது.
இந்த நிலை ரஜினிகாந்துக்கு வழக்கமாக நடப்பது தான் என்றாலும் சமீபகாலமாக சமூவலைதளங்களின் சத்தத்தால் சூப்பர்ஸ்டார் அந்தஸ்தே கேள்விக்குறி என்கிற விவாதங்கள் திட்டமிட்டு கிளப்பிவிட்டு அடங்கா நெருப்பாக அதை வைத்திருக்கும் நெட்டிசன்களும் ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் அல்லோலப்பட்டுக்கொண்டிருக்கிறது. வழக்கமாக ரஜினி சொல்லி அடிப்பார் வருவார் வெல்வார் என்றே இருக்கும் ஆனால் 2014ம் ஆண்டு லிங்கா படத்துக்குப்பிறகு அவர் வென்றாலும் வெளியுலகில் வெள்ளாமை கொடுக்காத விவசாயி என்று பேசப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
இதற்கு நடுவே அரசியல் அறிவிப்பு அதை தொடர்ந்து அரசியல் மறுப்பு என்ற தடுமாற்றங்களால் அவரது ரசிகர்களே சோர்வடைந்தனர்.இதை மீண்டும் பயன்படுத்தி அவரது 48 ஆண்டுகால சூப்பர்ஸ்டார் அந்தஸ்து குறித்து சில ஊடகங்களும் தொடர்ந்து கேள்விக்கணைகளாக தொடுத்து நெருக்கடி கொடுத்தது. ஆனால் 48 வருடங்கள் உலக சினிமாவில் யாருமே செய்யாத சாதனையை செய்துள்ள ரஜினிக்கு ரசிகர்கள் மற்றும் மக்களின் மனநிலையை மாற்றுவது கடினமான ஒன்றா என்ன? மீண்டும் அக்னி பிரவேசம் ரஜினி மட்டும் தான் தன்னை நிரூபிக்க வேண்டுமா? ஆம் ரஜினி மட்டும் தான் இங்கே ராஜாதிராஜா அவர்தான் ராஜாங்கத்தின் சிம்மாசனத்தை அலங்கரித்துக் கொண்டுருக்கின்றார் அப்படி என்றால் அவர்தானே நிரூபிக்க வேண்டும்.
ரஜினியின் முந்தைய படம் அவருடைய இமேஜுக்கு சரியாக போகவில்லை அதேபோல் நெல்சனின் பீஸ்ட் படமும் தோல்வி இரண்டு பேரும் சேர்ந்து வருகின்றார்களே ஜெயிலர் எப்படி இருக்கும்? இதோ இப்படி தான் இருக்கும் ரஜினி மேஜிக் என்கிற அளவுக்கு ஜெய்லர் முன்பதிவிலேயே முரட்டுக்காளையாய் முன்னோக்கி பாய்கிறது. தமிழகம் முழுவதும் தியேட்டர் உரிமையாளர்களே வந்து ஜெய்லர் படத்தை அனைத்து திரையரங்கிலும் திரையிடவேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் அளவுக்கு ரஜினி என்கிற மூன்றெழுத்து மந்திரம் இன்றும் முந்தி நிற்கின்றது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏரியாக்களில் 105 தியேட்டர்கள் 249 ஸ்கிரீன் (screen) இதில் காட்சிகள் மொத்தம் 1417 காட்சிகள். சென்னை சிட்டி மட்டும் 463 கட்சிகள். பரங்கிமலை, குரோம்பேட்டை, தாம்பரம், பூந்தமல்லி, போரூர் உள்ளிட்ட சென்னை லிமிட் ஏரியாவில் 97% முன்பதிவு மற்ற ஏரியாவில் 73% முன்பதிவு சாதனை செய்துள்ள ஜெய்லர் திருச்சி, தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர் ஏரியா 57 தியேட்டர் 106 ஸ்கிரீன் 40.5 சதவீதமும், கோவை, ஈரோடு, திருப்பூர் ஏரியா 36 திரையரங்கம் 97 ஸ்கிரீன், கோவை 94% முன்பதிவு திருப்பூர் 81% ஈரோடு 64 சதவீதமும், கடலூர், பாண்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி ஏரியாவில் (63 திரையரங்கங்கங்கள் 89 ஸ்கிரீன்) 84 சதவீதமும் முன்பதிவு செய்துள்ளது.
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் போளூர், ஆம்பூர், வாணியம்பாடி, வந்தவாசி ஏரியாவில் 42 தியேட்டர் ஸ்கிரீன் 59 முன்பதிவு திருவண்ணாமலை 76%வேலூர் 71 திருப்பத்தூர் 70% இப்படி b&c ஏரியாவில் முன்பதிவு சாதனைகளை செய்துள்ள ஜெய்லர் திரைப்படம் நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி ஏரியாவில் 31 தியேட்டர் 78 ஸ்கிரீன் 29% சதவீதம் செய்துள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட ஏரியா 60 தியேட்டர் 133 ஸ்கிரீனில் 36% முன்பதிவும் சேலம் எரியாவில் 72% முன்பதிவு சாதனை செய்துள்ளது. மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, சிவகாசி, தேனி, கம்பம் பெரியகுளம் உள்ளிட்ட ஏரியாக்களில் 83 திரையரங்கங்கள் ஸ்கிரீன் 169 முன்பதிவு மதுரை 64% மற்ற மாவட்டங்களில் 42% b&c ஏரியாவில் இந்த முன்பதிவு அசுர சாதனை என்றே கருதப்படுகிறது.
திருச்சி, தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர் ஏரியா 57 தியேட்டர் 106 ஸ்கிரீன் 40.5% முன்பதிவு செய்துள்ள ஜெய்லர் தமிழகம் முழுவதும் 1037 ஸ்கிரீன்களில் வெளியாவதோடு மட்டுமல்லாமல் விடுமுறை நாட்களோ பண்டிகை நாட்களோ இல்லாத சாதாரண நாளில் வெளியாகி ரஜினி அவ்வளவு தான் முடிஞ்சிப்போச்சு என்று பேசியவர்களுக்கு தனது பாணியில் நான் யானையில்ல குதிரை என்று 48 வருட சிம்மாசனத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். முன்பதிவிலேயே 30 கோடி வசூல் என்பது இதுவரை தமிழகம் கண்டிராத இமாலய சாதனை இதன் மூலம் இங்கே நான் தான் கிங் என்ற அவரது பஞ்ச் டயலாக் உண்மையாகியுள்ளது. ஜெய்லர் வருவதற்கு முன்பே வென்றுள்ளார். அது தான் ரஜினி மேஜிக்...
திராவிட ஜீவா
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.