/tamil-ie/media/media_files/uploads/2023/07/A-still-from-Hakum-song-from-Jailer.jpg)
ஜெயிலர்
ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 28-ந் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். நெல்சல் திலீப் குமார் இயக்கி வரும் இந்த படத்தில், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெரப், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர்.
சன் பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டாக தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி ஜெயிலர் படம் வெளியாக உள்ளது. இதனிடையே ஜெயிலர் படத்தில் இருந்து ஏற்கனவே காவாலா மற்றும் ஹகூம் என்ற இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 28-ந் தேதி நடைபெற உள்ளது.
Nadakkura Nada Puyalaacchey 🤩
The wait is over! Get ready for the star-studded Grand Audio Launch of #Jailer on July 28th at Nehru Indoor Stadium, Chennai.
Alappara Kelapparom 💥⚡️🙌🏼@rajinikanth@Nelsondilpkumar@anirudhofficial@Mohanlal@NimmaShivanna@bindasbhidu… pic.twitter.com/7RjIitV6v8— Sun Pictures (@sunpictures) July 22, 2023
இது தொடர்பான சன்பிச்சர்ஸ் வெளியிட்டுள்ள ப்ரமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.