/tamil-ie/media/media_files/uploads/2023/07/Jailer.jpg)
ஜெயிலர் படம் 2-வது சிங்கிள் ப்ரமோ
ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் முதல் பாடலானா காவாலா பாடல் கொடுத்த வைப் இன்னும் அடங்காத நிலையில் தற்போது படத்தின் 2-வது சிங்கிலுக்கான ப்ரமோ இணையத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கும் இந்த படத்தில், தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த பான் இந்தியா படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் முதல் பாடலானா காவாலா பாடல் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.
அருண்ராஜா காமாராஜா பாடலை எழுதி ஷில்பா ராவ் குரலில், வெளியான இந்த பாடல் இணையத்தில் ட்ரெண்டாகி வரும் நிலையில், தற்போது ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ஹூகும் (‘Hukum’) என்ற பாடல் வரும் ஜூலை 17-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
Goosebumps guaranteed #HukumPreview is here!🔥#Hukum ready to 💥🌪️ from July 17th @rajinikanth@Nelsondilpkumar@anirudhofficial@soupersubu#Jailer#JailerSecondSinglepic.twitter.com/BurXQaxOJB
— Sun Pictures (@sunpictures) July 15, 2023
‘‘ஹேய்.. இங்க நான் தான் கிங்கு.. நான் வைச்சது தான் ரூல்ஸ். அத என் இஷ்டத்துக்கு மாத்திக்கிட்டே இருப்பேன். அத கப்சிப்னு கேட்டு ஃபாலோ பண்ணணும். அத விட்டுட்டு அடாவடித்தனம் பண்ணா கண்டதுண்டமா வெட்டி கலைச்சு போட்ருவேன்” என ரஜினியின் ஆக்ஷன் டைலாக்குடன் மாஸாக நடந்து வரும் காட்சிகள் காட்டப்படுகின்றன. இந்த ப்ரோமா இரண்டாவது சிங்கிள் பாடலுக்கான எதிர்பாரப்பை அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.