நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் ஜெயிலர். சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாசிட்டீவான விமாசனங்களையும் பெற்றது. தமிழகத்தில் 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான 'ஜெயிலர்' தற்போதுவரை தமிழகத்திக் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டடிருக்கிறது.
ஜெயிலர் திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பு, தமிழகத்தில் புதிய சாதனையை கடந்துள்ளது. 'ஜெயிலர்' படம் தமிழகத்தில் ரூ.195 கோடி வசூலித்துள்ளதாகவும், தமிழகத்தில் படத்தின் ஷேர் ரூ.100 கோடி என்றும் கூறப்படுகிறது.இந்த சாதனையின் மூலம் தமிழகத்தில் 100 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை 'ஜெயிலர்' பெற்றுள்ளது. அதேபோல் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியான 29ஆம் நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ.610 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படம் திரையரங்குகளின் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகவும் கூறப்படும் நிலையில், , 'ஜெயிலர்' தயாரிப்பாளர்கள் ரஜினிகாந்த், நெல்சன் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோருக்கு தலா ஒரு காசோலை மற்றும் ஒரு சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளனர், 'ஜெயிலர்' கேரளா, கர்நாடகா மற்றும் பல இடங்களில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படமாகவும் மாறியுள்ளது, மேலும் இப்படம் உலகளவில் அதிக வசூல் செய்த இரண்டாவது தமிழ்ப் படமாக உள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கிய 'ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற காவலராக நடித்துள்ளார், மேலும் இப்படத்தில் விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், வசந்த் ரவி, யோகி பாபு, சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்னா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், 'ஜெயிலர்' நேற்று முதல் ஒடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது, மேலும் படம் பல தளங்களில் பல மொழிகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“