தமிழகத்தில் ஜெயிலர் டே... எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? ட்விட்டர் விமர்சனம்

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு திருவிழா போன்ற உணர்வை கொடுத்துள்ளதாக கூறி வருகின்றனர்.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு திருவிழா போன்ற உணர்வை கொடுத்துள்ளதாக கூறி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Jailer Review

Jailer Review

ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ள ஜெயிலர் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் இதனை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

Advertisment

அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், வெளியாகியுள்ள படம் ஜெயிலர் நெல்சன் திலீப் குமார் இயக்கததில் தயாராகியுள்ள இந்த படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுந்திர தினத்தை முன்னட்டு இன்று வெளியாகியுள்ள ஜெயிலர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ரஜினிகாந்தின் கடைசி 2 திரைப்படங்களான தர்பார் அண்ணாத்த எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு திருவிழா போன்ற உணர்வை கொடுத்துள்ளதாக கூறி வருகின்றனர். பிற மாநிலங்களிலும் ஜெயிலர் ரசிகர் ஷோ பார்த்த பலர் ஏற்கனவே படத்தைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை தங்களது சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

படத்தின் பிளாஷ்பேக், சிவ ராஜ்குமார் மற்றும் மோகன்லால் ஆகியோரின் கேரக்டர்கள் பலரையும் கவருமம் வகையில் உள்ளதே படத்தின் சிறப்பம்சங்கள் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, காட்சி நேரம் தாமதமானதால், தமிழக ரசிகர்கள் ஏமாற்றம் இருந்தாலும் அந்த தருணத்தை ரசிக்கத் தவறவில்லை. தியேட்டர் பல காட்சிகளில் கைத்தட்டல்கள் மற்றும் விசில்கள் பறக்கிறது. மேலும் இது தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்களை மக்கள் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

இது குறித்து ரஜினியின் பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், தனது சமூக வலைதள பக்கத்தில், “ஜெயிலர் டே.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டீம் சார்பாக தரமான பிளாக்பஸ்டர் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.. நெல்சன் தில்ப்குமார், சன் பிக்சர்ஸ், அனிருத் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் என்று பதிவிட்டு, ஜெயிலர் எஃப்.டி.எஃப்.எஸ் மற்றும் தலைவர் நிரந்தரம் என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் ரஜினிகாந்திடம் ஜெயிலர் படம் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, "நீங்கள் படத்தைப் பார்த்துவிட்டு அதைப் பற்றி சொல்லுங்கள்" என கூறிவிட்டு இமயமலை சென்றுவிட்டார். அவர் சொன்னபடியே இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் ஜெயிலர் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவதால், படம் நிச்சயம் பிளாக்பஸ்டராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்த் தனது ரசிகர்கள் எதிர்பார்ப்பதை கச்சிதமாக கொடுத்துள்ளார்.

அதே நேரத்தில், நெல்சன் படம் முழுக்க தனக்காக டார்க் காமெடி அம்சங்களை வைத்து ஸ்கோர் செய்துள்ளார். இது குறித்து பாலாஜி துரை என்ற நபர் தனது முகநூல் பக்கத்தில், "ஜெயிலர்: வின்னர்.. தி என்டர்டெய்னர்.. நெல்சன் மற்றும் வலிமைமிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவருக்கும் தெளிவான கம்பேக்." என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Superstar Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: