Advertisment

ஏழை ரசிகர்களை அனுமதிக்கவில்லை : ரஜினிகாந்தை பார்க்க வந்த ரசிகர் ஏமாற்றம்

படப்பிடிப்பு குழுவினருக்கு தெரியாமலேயே ரஜினி நடிக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Rajinikanth

லால் சலாம் ரஜினிகாந்த்

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

Advertisment

லால் சலாம் படத்தின் ஷூட்டிங் புதுச்சேரியில் நடைபெற்று வரும் நிலையில், ரஜினியை பார்ப்பதற்காக நாளுக்கு நாள் மக்கள் கூட்டம்  அதிகரித்து வருவதால், சூட்டிங் நடக்கும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குமத் லால் சலாம் படத்தில் சிறப்பு தொற்றத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,  ரஜினி தொடர்பான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்த இதில் கலந்துகொள்வதற்காக ரஜினிகாந்த புதுச்சேரியில் முகாமிட்டுள்ள நிலையில், அவரை பார்க்க தினமும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் படக்குழவினருக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே படப்பிடிப்பு குழுவினருக்கு தெரியாமலேயே ரஜினி நடிக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் தனிநபர் ஒருவரை கூட சூட்டிங் நடக்கும் இடத்தில் அனுமதிக்கப்படவில்லை. புதுச்சேரி ஏ.எஃப்.டி ரோடியோர் மில் பழைய ஆலையில் கடந்த மூன்று நாட்களாக லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த சூட்டிங் வருகின்ற 17ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், ரஜினிகாந்த் இந்த ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் லால் சலாம் திரைப்படத்தில் நடிகர்கள் விஷ்ணுவிஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இந்த படத்தின்  முதல்கட்ட படிப்பிடிப்பு ஏற்கனவே திருவண்ணாமலை மற்றும் மும்பையில் நடந்து முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது புதுவை கடலூர் ரோட்டில் உள்ள ரோடியர் மில் பழைய வளாகத்தில் படப்பிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டது.

படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நாள் முதல் ரஜினிகாந்த் நநடிக்கும் காட்சிகள்  வலைதளத்தில் பரவி வருகிறது இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் போலீஸ் பாதுகாப்பு கோரியதை தொடர்ந்து சூட்டிங் நடக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அந்நியர்கள் யாரையும் உள்ளே அனுப்புவதில் மிகக் கடுமையாக போலீசார் நடந்துகொள்வதாக ரஜினி ரசிகர் ரஜினிய பார்க்க வருபவர்கள் தெரிவித்து அதையும் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பி  விடுகின்றனர்

இன்று படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் ரஜினியை  காண வந்த தினக்கூலி தொழிலாளி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

புதுச்சேரியில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பசி பட்டினியுடன் அவரைப் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஏழை ரசிகர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. அரசியல்வாதி உதவி இருந்தால் உள்ளே போகலாம் என்று ஒவ்வொருவரும் போய் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இன்றைக்கு அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்றால் அது மக்களால் தான் அந்த மக்களையும் சில மணி நேரம் மக்களுக்கு ஒதுக்கி பார்க்கலாம்.

காவல் துறையினர் மிகக் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் அமைச்சருடைய கடிதம் அவர்களுக்கு தேவைப்பட்டவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கிறார்கள் பல ஊர்களிலும் இருந்து வந்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள் சூப்பர் ஸ்டார் அவர்கள் மக்களுக்கு டைம் ஒதுக்கி கொடுக்க வேண்டும் பசி பட்டினியில் மக்கள் வாடுகிறார்கள் என அந்த வீடியோவில் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment