வாரிசு பட நடிகை 3-வது திருமணம்?
பொங்கல் பண்டிகை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் விஜயின் அம்மாவாக நடித்தவர் ஜெயசுதா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த இவர், தற்போது முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். இதனிடையே தற்போது 64 வயதாகும் ஜெயசுதா தொழிலதிபர் ஒருவரை 3-வது திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
தெலுங்கில் வரவேற்பை பெறும் வாரிசு
பொங்கல் பண்டிகை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாகவில்லை. 3-நாள் தாமதாக இன்று (ஜனவரி 14) வாரிசு படம் தெலுங்கில் வெளியாகியுள்ளது. இந்த படம் முதல் நாளில் 10 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்றும் தயாரிப்பு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
பாதையை மாற்றிய நடிகர் ரஜினிகாந்த்
தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு ரஜினிகாந்த் தனது அடுத்த படமாக டான் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
100 கோடி கிளப்பில் இணைந்த வாரிசு
பொங்கல் பண்டிகை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாகவில்லை. 3-நாள் தாமதாக இன்று (ஜனவரி 14) வாரிசு படம் தெலுங்கில் வெளியாகியுள்ளது. இதனிடையே வாரிசு திரைப்படம் வெளியான 3 நாட்களில் 103 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 49 கோடி வசூலித்துள்ளதாகவும், கூறப்படுகிறது.
துணிவு படத்தின் வசூல் நிலவரம்
100 கோடி கிளப்பில் துணிவு எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படம் கடந்த ஜனவரி 11 ந் தேதி வெளியானர். வாரிசு படத்துடன் வெளியான துணிவு படம் முதல் நாளில் பாக்ஸ் ஆபிசில் ஆதிக்கம் செலுத்தியது.2வது நாளில் சராசரி வசூலை பெற்றது. ஆனால் 3 ம் நாள் வசூலில் பாக்ஸ் ஆபிசில் மீண்டும் செலுத்திய நிலையில், தமிழகத்தில் துணிவு படம் சுமார் ரூ.46 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் ‘துணிவு’ திரைப்படம் 3ஆம் நாள் முடிவில் உலகளாவிய பாக்ஸ் ஆபிசில் தோராயமாக ரூ. 93 கோடிகளை ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/