தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரஜினிகாந்த் கடந்த 1975-ம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
தொடர்ந்து மூன்று முடிச்சு, 16 வயதினிலே, ஆயிரம் ஜென்மங்கள், முல்லும் மலரும், பைரவி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதில் கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில் நடித்த ரஜினிகாந்த் பின் நாளில் பைரவி படத்தின் மூலம் தனி ஹீரோவாக நடித்து தற்போது அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள தமிழ் சினிமா நடிகர்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார்.
பிளாக் அன்ட் வொயிட் படம் தொடங்கி தற்போதை டிஜிட்டல் சினிமா வரை உள்ள அனைத்து வகை ரசிகர்களையும் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலால் கட்டிப்போட்டுள்ள ரஜினிகாந்த், நடிப்பில் வெளியான படையப்பா, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன், உள்ளிட்ட பல படங்கள் தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட வசூலி வேட்டை நடத்திய படங்களாக உள்ளன.
தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் கலெக்ஷன் நடத்திய படங்களின் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் டாப் 10-ல் ரஜினியின் சில படங்களை சொல்லாமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு ரஜினியின் படங்கள் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. தற்போது அவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக திகழும் நடிகர் ரஜினிகாந்த், தான் சினிமாவுக்கு வந்த தொடக்க காலத்தில் பல விமர்சனங்களை சந்தித்துள்ளார். இந்த வகையில் அவர் சிறுவயதில் சந்தித்த ஒரு முக்கியமான தருணத்தை தர்பார் பட இசை வெளியீட்டு விழாவின்போது பகிர்ந்துகொண்டார்.
நான் எஸ்எஸ்எல்சி படித்து முடித்தவுடன் அதன்பிறகு படிக்க மாட்டேன். என்னை எதாவது வேலைக்கு போடுங்க என்று என் அண்ணனிடம் சொன்னேன். ஆனால் அவர், நம்ம குடும்பத்தில் யாருமே படிக்கவில்லை நீயாவது ஒரு டாக்டர் அல்லது ஐபிஎஸ் ஆக வேண்டும் என்று சொல்லி அந்த ஏரியாவில் பணக்கார ஸ்கூலாக பார்த்து என்னை சேர்த்தவிட்டார்.
அப்போது படிபபில எனக்கு இன்ட்ரஸ்டே இல்லை. எக்னாமினேஷன் வந்தது. அதற்காக அண்ணா ரொம்ப கஷ்டப்பட்டு கடன் வாங்கி ரூ 120 எக்னாமினேஷன் பீஸ் கட்டு என்று எனக்கு கொடுத்தார். ஆனால் எனக்கு கண்டிப்பாக தெரியும் எக்ஸாம் எழுதுனா நான் பாஸ் ஆக மாட்னு. ஆனா கஷ்டப்பட்டு இவ்ளோ பணம் கொடுத்துருக்காங்க இதை வச்சி என்ன செய்யலாம்னு யோசிச்சேன்.
அன்றைக்கு நைட்டே வீட்ல இருந்து யாருக்கும் தெரியாம கௌம்பி பெங்களூர் சென்ரல் ரயில்வே ஸ்டேஷன் போயிட்டேன். நைட் 10.30 மணினு நினைக்கிறேன்.அங்க ஒரு ட்ரெயின் நின்னுட்டு இருந்துச்சு இது எங்க போகுது என்று கேட்டேன் தமிழ்நாடு மெட்ராஸ் போகுது என்று சொன்னார்கள். அங்கே டிக்கெட் வாங்கி அந்த ட்ரெயினில் ஏறி படுத்துட்டேன் எனக்கு தெரியல காலையில் ட்ரெயின் மெட்ராஸ் வந்துருக்கு.
எல்லாரும இறங்கிட்டு இருக்காங்க நானும் இறங்கினேன். அப்போது டிக்கெட் கலக்டர் டிக்கெட் கேட்டுக்கிட்டு இருக்காரு. நான் என் பாக்கெட்ல டிக்கெட் பாக்குறேன் என்ட் டிக்கெட்டே இல்லை. எங்கேயெ விட்டுட்டேன். அப்படியே டிக்கெட் கலக்டரிடம் சொன்னேன். ஆனா அவர் நம்பல கொஞ்சம் ஓரமா நில்லு என்று சொல்லிவிட்டார். ட்ரெயினில் இறங்கிய அனைவரும் சென்றுவிட்டார்கள். ஸ்டேஷனே காலியா இருக்கு.
அப்போது டிக்கெட் கலக்டர் என்னிடம் டிக்கெட் கேட்க, நான் டிக்கெட் எடுத்தேன் ஆனா எங்கயோ தொலைச்சிட்டேன். நான் பொய் சொல்ல மாட்டேன். என்று கன்னடத்தில் சொல்கிறேன். எனக்கு அப்போ தமிழ் தெரியாது. ஆனால் அவர் நான் சொல்வதையே கேட்கவில்லை. இல்ல நீ டிக்கெட் வாங்கனும் அதற்கு பைன் கட்டனும் அப்போதான் வெளிய விடுவேன் என்று பிடிவாதமாக சொல்லிவிட்டார்.
ஆனா அழாத குறையாக டிக்கெட் வாங்கினேன் என்று சொல்ல அப்போது அங்க வந்த போர்ட்டர்ஸ் 5 பேர் என்னை பார்த்து இந்த பையன் மூஞ்சியை பார்த்தா தெரியலையா பணம் இல்லை டிக்கெட் எடுக்கலனு சொன்ன ஜெயில்லயா போட போறீங்க என்று கேட்டனர். அதோடு மட்டும் இல்லாமல் பணத்தை நாங்கள் தருவதாக சொன்னார்கள். ஆனால் நான் என்னிட்டம் பணம் இருக்கு என்று சொல்லி பணத்தை எடுத்து காட்டினேன்.
நான் டிக்கெட் எடுத்தேன். ஆனா எங்கயோ தொலைச்சிட்டேன் என்று சொன்னேன். அப்போது அந்த பணத்தை பார்த்த டிக்கெட் கலக்டர் உன்னை நம்புறேன்பா. நீ போ என்று சொல்லி தமிழக மண்ணில் கால் வைக்க அனுப்பி வைத்தார்கள். அந்த டிக்கெட் கலக்டர் எனக்கு உற்றார் உறவினர் இல்லை. அந்த போர்ட்டர்ஸ் எனக்கு தெரிஞ்சவங்க இல்லை எனக்காக பணம் கொடுக்க வந்தாங்க. என்னை நம்பி உள்ளே விட்டார்கள் என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.