Tamil Cinema Rajinikanth receives grand welcome in Jaisalmer With Lungi Dance ராஜஸ்தான் சென்ற ரஜினிகாந்த்... லுங்கி டான்ஸ் ஆடிய ஹோட்டல் ஊழியர்கள் : வைரல் வீடியோ | Indian Express Tamil

ராஜஸ்தான் சென்ற ரஜினிகாந்த்… லுங்கி டான்ஸ் ஆடிய ஹோட்டல் ஊழியர்கள் : வைரல் வீடியோ

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் சென்றுள்ளார்.

ராஜஸ்தான் சென்ற ரஜினிகாந்த்… லுங்கி டான்ஸ் ஆடிய ஹோட்டல் ஊழியர்கள் : வைரல் வீடியோ

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பிற்காக ஜெய்சால்மர் வந்தடைந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு லுங்கி டான்ஸ் பாடல் மூலம் சிறப்பான வரவேற்பு அளித்த வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் வில்லனாக நடிக்கும் இந்த படத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரப், தெலுங்கு நடிகர் சுனில், நடிகை தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர்.

நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படக்குழுவினர், அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக ஜெய்சால்மர் சென்றுள்ளனர். இதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலைானது.

தொடர்ந்து நேற்று மாலை ஜெய்சால்மர் சென்றடைந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு அவர் தங்கும் ஹோட்டல் ஊழியர்கள் அவருக்காக லுங்கி டான்ஸ் பாடலுக்கு நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் திகைத்து நின்றார். அதேபோல் லுங்கி டான்ஸ் பாடலில் தலைவா என்ற வார்த்தை வரும்போது ஊழியர்கள் தங்களது குரலில் தலைவா என்ற முழக்கங்களுடன் வாழ்த்தினர்.

இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் சிறப்பான வரவேற்பு என்று கூறியுள்ள நிலையில், பலரும் இதயம் எமோஜிகளை பதிவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். ரஜினிகாந்தின் 72-வது பிறந்த நாளில் ஜெயிலர் படத்தின் டீசர் வெளியிடப்பட்ட நிலையில், இதில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியனாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜெயிலர் ஏப்ரல் 14, 2023 அன்று திரையரங்குகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema rajinikanth receives grand welcome in jaisalmer with lungi dance