கமல்ஹாசன் நடித்த ஒரு படத்தை பார்த்த ரஜினிகாந்த், டெக்னாலஜி அதிகம் இல்லாத காலக்கட்டத்தில் இப்படி ஒரு படமா? நான் இந்த படத்தை பார்த்துவிட்டு கமல்ஹாசன் வீட்டுக்கு சென்று காலில் விஜ போனேன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு பிறகு இரு பெரும் துருவங்கள் என்றால் அது ரஜினிகாந்த் – கமல்ஹாசன் தான் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும், வளர்ந்தபின் அவருக்கு அவ்வளவு எளிதில் ஹீரோ வாய்ப்பு கிடைத்துவிடவில்லை. வளர்ந்த கமல்ஹாசன், உதவி நடன இயக்குனர், உதவி இயக்குனர், துணை நடிகர் என பல பணிகளை பார்த்து இறுதியாகத்தான் ஹீரோவாக உயர்ந்துள்ளார்.
அதேபோல் பஸ் கண்டக்டராக இருந்து, திரைப்பட கல்லூரியில் படிக்கும்போதே 1975-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் ரஜினிகாந்த். அந்த படத்தில் கமல்ஹாசனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார், இவருக்கும் இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்துது. அதன்பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட பல படங்களில் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணைந்து நடித்து வெற்றிகளை குவித்தனர். ஒரு கட்டத்தில், இவர்கள் இருவரும் பிரிந்து தனித்தனியாக நடிக்க முடிவு செய்துள்ளனர்.
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான நினைத்தாலே இனிக்கும் என்ற படம் தான் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கடைசி படம். அதன்பிறகு இருவரும் தனியாக நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நிலையில், ஒரு படத்தை பற்றி மற்றொருவர் புகழ்ந்து பேசுவதும், படப்படிப்பு தளங்களில் சந்திப்பது என இவரும் நெருக்கமான நட்பை கடைபிடித்து வருகிறார். அந்த வகையில் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தை பார்த்து மிரண்டு போன ரஜினிகாந்த் நள்ளிரவில் கமல் வீட்டு கதவை தட்டியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஜினிகாந்த். ராஜ்கமல் பிலிம்ஸ் பல படங்கள் எடுத்தார்கள். அதில் எனக்கு பிடித்த படம் அபூர்வ சகோதரர்கள். அந்த படம் ரிலீஸ் ஆனபோது வெளியூரில் படப்பிடிப்பில் இருந்தேன். வந்தவுடன், இரவு 11 மணிக்கு மேனா தியேட்டரில் எனக்காக இந்த படத்தை திரையிட்டார்கள். அந்த படம் பார்த்து முடிக்கும்போது 2 மணி ஆகிவிட்டது. அப்போது நான் என் மனைவியிடம் இப்போதே கமல்ஹாசனை பார்க்க வேண்டும் என்று சொன்னேன். இப்போவா அவங்க தூங்கிட்டு இருப்பாங்களே என்று அவர் சொன்னார்.
இல்ல இல்ல நான் அவரை பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டு, 2.30 மணிக்கு அவரது வீட்டுக்கு சென்று எழுப்பி கை கொடுத்து, வயதில் என்னைவிட நீங்கள் சின்னவர் இல்லனா உங்களில் நான் விழுந்துடுவேன். நீங்க ஒரு இம்மார்டல். அப்போ இந்த அளவுக்கு டெக்னாலஜி இல்லை. அந்த டைமில், அந்த குள்ளமான கேரக்டரில் நடித்தபோது எடுத்த சிரமங்கள் எதுவும் சாதாரணமாக இருந்திருக்காது என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.