Advertisment

38 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் - சத்யராஜ் காம்போ : தலைவர் 171 புதிய அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 171 படம் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
rajinikanth Sathyaraj

ரஜினிகாந்த் - சத்யராஜ்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகநாந்த் நடிக்க உள்ள தலைவர் 171 படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், 38 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் – சத்யராஜ் மீண்டும் இணைந்துள்ளனர் என்று கூறி வருகின்றனர்.

Advertisment

ஜெயிலர் படத்திற்கு பிறகு டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சுவாரியார், ரித்திகா சிங், உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

விரைவில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு முடிய உள்ள நிலையில், அடுத்து ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக தலைவர் 171 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பது மட்டும் உறுதியாகியுள்ளது. அதே சமயம் கடந்த சில நாட்களாக இந்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது தலைவர் 171 படத்தில் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1980-களில் வெளியான பல படங்களில் ரஜினிகாந்த் – சத்யராஜ் இணைந்து நடித்திருந்த நிலையில், கடைசியாக, 1986-ம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான மிஸ்டர் பாரத் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் இருவரும் அப்பா மகனாக நடித்திருந்தனர்.

அதன்பிறகு ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜூவிடம் கேட்டபோது, அவர் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதால் அந்த கேரக்டரில் நடிகர் சுமன் நடித்திருந்தார். அதன்பிறகு தற்போது லோகேஷ் கனராஜ் சத்யராஜூவிடம் பேசி படத்தில் நடிக்க சம்மதம் வாங்கியுள்ளார். அதே சமயம் படத்தில் சத்யராஜ் ரஜினிகாந்துக்கு வில்லனா அல்லது நண்பனா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

38 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் – சத்யராஜ் மீண்டும் இணைந்து படத்தில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் தலைவர் 171 படத்தில் ஸ்ருதிஹாசன், விஜய் சேதுபதி, மைக் மோகன் ஆகியோரும் நடிப்பதாகவும், நடிகர் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth Sathyaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment