ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இன்றுவரை கல்ட் க்ளாகிக் படமாக நிலைத்திருக்கும் பாட்ஷா திரைப்படத்தில் அவரின் முதல் தங்கை கவிதா கேரக்டரில் நடித்த நடிகை தற்போது என்ன செய்துகொண்டு இருக்கிறார் தெரியுமா? இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்த 1995-ம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படம் பாட்ஷா. ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் பெரிய வெற்றிப்படமாக அமைந்த இந்த படத்தில் அவருடன், ரகுவரன், சரண்ராஷ், விஜயகுமார், சாத்யபிரியா, யுவராணி, ஷாஷி குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கேங்ஸ்டர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம், மெகாஹிட்டான படம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இந்த படத்தில் ரஜினிகாந்தின் தம்பி ஷிவா கேரக்டரில் நடித்த ஷாஷிகுமார் குறித்து சமீபத்தில் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இந்த படத்தில் அவரின் மூத்த தங்கை கவிதா கேரக்டரில் நடித்த நடிகை செண்பகா குறித்தும், அவருடைய தற்போதைய புகைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது. 1991-ம் ஆண்டு கஷ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான தூது போ செல்லக்கிளி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் செண்பகா.
அதன்பிறகு, கலிகாலம், ஐ லவ் இந்தியா, உடன்பிறப்பு, உள்ளே வெளியே, பிரபுவுடன் ஜல்லிக்கட்டு காளை, விஜகாந்துடன் திருமூர்த்தி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த இவர், பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்திருந்தார். 1995-ம் ஆண்டு சிவாஜி பிரபு, நடிப்பில் வெளியான பசும்பொன் படத்தில் நடித்திருந்த செண்பகா அதன்பிறகு தமிழில் நடிக்கவில்லை. 3 மலையாள படங்களில் நடித்த இவர், அதன்பிறகு சினிமாவல் இருந்து விலகிவிட்டார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/11/baasha-2025-08-11-19-10-05.jpg)
1996-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நந்தகோலாண்டே குஸ்ருதிகள் என்ற படம் தான் இவர் நடித்த கடைசி படமாகும். இதனிடையே சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் செண்பகா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது, இதை பார்த்த ரசிகர்கள் பலரும், இவரா பாட்ஷா ரஜினியின் தங்கை என்று ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.