/indian-express-tamil/media/media_files/2025/03/29/YX2kN9CtNBqaZcwiH59o.jpg)
“நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம். எங்களது பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ் சினிமாவில், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடல் ஆசிரியர், பாடகர், நடன இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவுக்கு, பல புதுமையாக டெக்னாலஜிகளை அறிமுகம் செய்த நடிகர் கமல்ஹாசன், தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்துள்ளார். சமீபத்தில் இந்நிறுவனம் தயாரிப்பில், வெளியான சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு சில தவிர்க்க முடியாத காரணங்களால் அப்படத்தில் இருந்து விலகிய ராஜ்கமல் நிறுனம், தற்போது மணிரத்னம், இயக்கத்தில், கமல்ஹாசன், சிம்பு மற்றும் த்ரிஷா நடிக்கும் தக் லைப் என்ற படத்தை தயாரித்து வரும் நிலையில், அடுத்து எந்த படத்தை தயாரிக்கும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதனிடையே ராஜ்கமல்நிறுவனம் சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
— Raaj Kamal Films International (@RKFI) March 29, 2025
எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.