ஷெரிஃப் இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப் நடிப்பில் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இன்று வெளிவந்திருக்கும் 'ரணம் அறம் தவறேல்' படத்தின் விமர்சனம்
கதைக்களம் :
சென்னையில் அடுத்தடுத்த இடங்களில் எரிந்த நிலையில் கால், கை, உடம்பு என தனித்தனியாக கண்டெடுக்கப்படுகின்றது. இந்நிலையில், குற்றச் செயலுக்கான கிரைம் ஸ்டோரி எழுதுபவரும், குற்றவாளிகளை உருவங்களை ஸ்கெட்ச் செய்பவருமான சிவா (வைபவ்) விசாரணைக்கு உதவ வருகிறார். அவரின் முயற்சியில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் வெவ்வேறு நபர்களுடையது என தெரிய வருகிறது.
திடீரென இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டரும் காணாமல் போக, வழக்கு தான்யா ஹோப் கைக்கு வருகிறது. இவரும் வைபவும் இணைந்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்தார்களா? இந்த கொலைகளுக்கு என்ன காரணம் ? என்பதே படத்தின் மீதி கதை
நடிகர்களின் நடிப்பு :
தனது 25வது திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதற்கான களமாக மாற்றியிருக்கிறார் வைபவ். கேரகடருக்கு தேவையான அளவான உணர்ச்சியில் அழகான நடிப்பை கொடுத்துள்ளார். போலீசாக வரும் நாயகி தான்யா ஹோப் முடிந்தளவு அந்த ரோலுக்காக உழைத்திருக்கிறார். மேலும் நந்திதா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஜீவா சுப்பிரமணியம் ஆகியோரின் நடிப்பும் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது
இயக்கம் மற்றும் இசை
'நெக்ரோபிலியா' என்ற அதிகம் பேசப் படாத ஒரு உளவியல் விஷயத்தை வைத்து திரைக்கதை அமைத்த இயக்குனர் ஷெரீஃப்க்கு பாராட்டுக்கள். அரோல் குரோலியின் இசை படத்தின் பரபரப்பை மேலும் கூட்ட உதவியுள்ளது. பாலாஜி. K. ராஜாவின் ஒளிப்பதிவும், முனிசின் படத்தொகுப்பும் சிறப்பாக உள்ளது.
படத்தின் ப்ளஸ் :
• பரபரப்பான முதல் பாதி
• நடிகர்களின் யதார்த்த நடிப்பு
• மிரட்டல் இசை
• 'நெக்ரோபிலியா' உளவியல்
படத்தின் மைனஸ் :
• சுமாரான இரண்டாம் பாதி
• அழுத்தமில்லாத வசனங்கள்
மொத்தத்தில் கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு சூப்பராகவும், மற்றவர்களுக்கு சுமாராகவும் "ரணம் அறம் தவறேல் திரைப்படம் அமைந்துள்ளது
நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“