ஷங்கர் பட நாயகியின் சம்பளம்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தற்போது ராம்சரன் நடிப்பில் நேரடி தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் கியாரே அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, சுனில் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். கேம் சேஜ்சர் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிக்க கியாரே அத்வானிக்கு 4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் விழாவில் ராஷ்மிகா மந்தனா
15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த தொடரின் தொடக்க விழா அகமதாபாத்தில் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் நடிகை தமன்னா பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் தொடக்க விழாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளித்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ளனர். இந்நிலையில், இந்த சீரியலில் முல்லையாக நடித்து வரும் நடிகை லாவன்யா ரேசர் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளார்.
படுக்கை அறை புகைப்படத்தை பகிர்ந்த ஸ்ருதி ஹாசன்
தமிழ் தெலுங்கு இந்தியின் பிஸியாக நடித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் அடிக்கடி தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது காதலருடன் படுக்கை அறையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மருத்துவமனையில் நடிகர் சரத்பாபு
தமிழ் தெலுங்கில் முன்னணி முன்னணி குண்ச்சித்திர நடிகராக இருந்தவர் சரத்பாபு. ஒரு சில படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும் அந்த படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதேபோல் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தற்போது 71 வயதாகும் சரத்பாபு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil