‘ஷகலக பேபி’ ரட்சகன் பட சோனியா ஞாபகம் இருக்கா? இப்போ என்ன செய்கிறார்? ரீசன்ட் போட்டோஸ்!

1994-ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் பட்டம் வென்று அசத்திய சுஷ்மிதா சென், அதே ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டியில் பங்கேற்று, மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார்.

1994-ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் பட்டம் வென்று அசத்திய சுஷ்மிதா சென், அதே ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டியில் பங்கேற்று, மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார்.

author-image
WebDesk
New Update
Sushmita Se1

சினிமாவை பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும் புதுமுக நடிகைள் பலர் அறிமுகமாகி வருகிறார். இதில் அனைவருமே அடுத்தடுத்து படங்களில் புக் ஆகி முன்னணி நடிகைகளாக வருகிறார்களா என்றால் அது கேள்விக்குறிதான். அதே போல் ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு நடிக்க செல்லும் நடிகைகள் பலரும் ஓரிரு படங்களை முடித்தக்கொண்டு, தங்கள் சொந்த மொழிக்கு வந்துவிடுவிடுவார்கள்.

Advertisment

இதில் பல நடிகைகள் மாற்று மொழியில் நடித்திருக்கிறார்களா என்று கேட்கும் அளவுக்கு அறிமுகம் இல்லால் இருப்பார்கள். ஆனால் ஒருசில நடிகைகள், மாற்று மொழியில் ஒரு படத்தில் நடித்திருந்தாலும் கூட அவர்களை ரசிகர்கள் பலரும் இப்போதும் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். அந்த வகையிலான ஒரு நடிகை தான் சுஷ்மிதா சென். பாலிவுட் நடிகையான இவர், தமிழில் நடித்தது ஒரு படம் தான், ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். ஆனால் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர்.

1994-ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் பட்டம் வென்று அசத்திய இவர், அதே ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார். இந்த போட்டியில், மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற சுஷ்மிதா சென், அதனைத் தொடர்ந்து 1996-ம் ஆண்டு: இந்தியில் வெளியான தஸ்டாக் என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமான சுஷ்மிதா சென் 1997-ம் ஆண்டு வெளியான ரட்சகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

Sushmita Sen

Advertisment
Advertisements

பிரவீன் காந்தி இயக்கிய இந்த படத்தில் நாகர்ஜூனா நாயகனாக நடித்திருந்தார். அவருடன், வடிவேலு, எஸ்.பி.பாலசுப்பிரமணியன், ரகுவரன், கிரிஷ் கர்னாடு, அஜய் ரத்னம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த படத்தில் அமைந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றிருந்தது. குறிப்பாக இந்த படத்தில் சுஷ்மிதா சென் கேரக்டர் பெயாரான சோனியா பெயரில், சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா என்ற பாடல் இன்றும் ரசிகர்களின் ரிங்டோனாக ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

ரட்சகன் படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து சுஷ்மிதா அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்து இந்தி படங்களில் கமிட் ஆன அவர், அதன்பிறகு தமிழில் நடிக்கவே இல்லை. 1999-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த முதல்வன் படத்தில் ‘ஷகலக பேபி’ என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இந்த பாடல் இப்போதும் வைப் செய்யும் அளவுக்கு காலம் கடந்தும் நிலைத்திருக்கிறது. இந்த படத்தின் இந்தி ரீமேக்கான நாயக் படத்திலும் அந்த பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார்.

Sushmita Se1n

முதல்வன் படததிற்கு தமிழில் நடிக்காத சுஷ்மிதா சென், இந்த படங்களில் கவனம் செலுத்திய நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு அக்ஷைகுமார் நடிப்பில் வெளியான பாஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு இந்தியில் நடிக்காத சுஷ்மிதா கடைசியாக நடித்த படம், நிர்பாக என்ற பெங்காலி படமாகும். இந்த படம் 2015-ம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து 2016-ம் ஆண்டு, மிஸ் யூனிவர்ஸ் அழகிப்போட்டியின் நடுவராக நியமிக்கப்பட்ட சுஷ்மிதா சென், பிலிப்பைன்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

2008-ம் ஆண்டு சின்னத்திரையில் அறிமுகமான சுஷ்மிதா, சில நிகழ்ச்சிகளில், நடுவராக பங்கேற்றிருந்த நிலையில், 2023-ம் ஆண்டு இந்தியில் வெளியான தாளி என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இந்த தொடர் ஜியோ சினிமாவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது,

Sushmita Sen

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: