ரவி மோகன் நடிப்பில், டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கெ பாபு இயக்கத்தில் தயாராகி வரும் படத்தின் பெயர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. அரசியல் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் டீசர் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Advertisment
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2003-ம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ரவி. முதல் படமே பெரிய வெற்றிப்படமாக அமைந்ததை தொடர்ந்து ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்ட அவர், அடுத்து எம்.குமரன், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தாம்தூம், தில்லாலங்கடி, பேராண்மை என பெரிய வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு கோமாளி என்ற பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த ஜெயம்ரவி, அதன்பிறகு நடித்த எந்த படங்களும் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிரதர் படம் கூட அவருக்கு கைகொடுக்காத நிலையில், சமீபத்தில் தனது மனைவியை விவாரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஜெயம்ரவி தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாக தொடங்கியது.
இதனிடையே சமீபத்தில் தனது பெயரை ரவி மோகன் என்று அறிவித்த இவர், தற்போது, ஜீனி, சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வரும் எஸ்.கே.25 படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மேலும், தனது 34-வது படமாக டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அரசியல் கதையம்சம் கொண்ட இந்த படத்தில், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் நாசர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
Advertisment
Advertisement
மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடாக மாறியதற்கும் ஒரு காரணம் இருக்கிறது! தமிழ்நாடு தமிழகமாகாமல் இருக்க பாதுகாத்து கொள்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது!
சட்டசபையில் விவாதம் நடப்பது போல் வரும் டிசரில், ரவி மோகன் கேரக்டரின் முந்தைய பெயரை முதல்வராக இருக்கும், நாசர் கேட்க, அதற்கு எதிர்கட்சி தலைவராக இருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் எதிர்ப்பு தெரிவிக்க, இதை பார்த்த நாசர் பெயர் எதற்காக என்பதற்கு ஒரு விளக்கம் கொடுக்கிறார். இதன் இறுதியில், ரவி மோகன் தனது பெயர் இப்போது என் பெயர் சண்முக பாபுவாகத்தான் தெரியும் எனது முந்தைய பெயர் என்று சொல்ல, படத்தின் டைட்டில் கராத்தே பாபு என்று வருகிறது. இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது.
குறிப்பாக இந்த டீசரில், முதல்வராக இருக்கும் நாசர் பேசும்போது, மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடாக மாறியதற்கும் ஒரு காரணம் இருக்கிறது! தமிழ்நாடு தமிழகமாகாமல் இருக்க பாதுகாத்து கொள்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது என்று சொல்கிறார். இந்த வசனம் தற்போது தி.மு.க.வினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இதற்கு முக்கிய காரணம் அறிஞர் அண்ணா தான் என்று கூறி வருகின்றனர்.