இந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் சினிமா துறைகளில் கோலிவுட் சினிமாவுக்கு முக்கிய இடம் உண்டு. ஆண்டுதோறும் 200க்கு மேற்பட்ட படங்களை வெளியிடும், கோலிவுட் சினிமாவில் உலகளவில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. வெளிநாடுகளில் இந்தி படங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த காலக்கட்டம் தாண்டி இப்போது தமிழ் சினிமாவும் வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வசூலை ஈட்டி வருகிறது.
தமிழ் சினிமா மட்டுமல்லாமல், சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள், நேர்காண்ல்கள், மற்றும் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், சினிமா நடிகர்களின் ரசிகர்கள் தங்கள் நட்சத்திரங்களின் பிறந்த நாள் மற்றும் அவரின் படங்கள் வெளியாகும் சமயத்தில், திருவிழா போன்று கொண்டாடுவதும் வழக்கம். அதே சமயம், அவ்வப்போது சில நட்சத்திரங்கள் ஊடகங்கள் மூலம் சர்ச்சைகளையும் கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் சமீபத்தில் சர்ச்சைக்கு பெயர்பெற்ற 5 முக்கிய நட்சத்திரங்களை பார்ப்போம்.
இசையமைப்பாளர் இளையராஜா – காப்புரிமை பிரச்சனை
தனது பாடல்கள் எங்கு பயன்படுத்தப்பட்டாலும் அதற்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்பி இழப்பீடு கேட்கும் வழக்கத்தை வைத்துள்ள இளையராஜா, இதற்காக கடுமையான விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருவது தொடர்ந்து வருகிறது. இதில் குறிப்பிடத்தகக் ஒன்று சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் கூலி பட டைட்டில் டீசரில், தனது பாடல் பயன்படுத்தப்பட்டதை கூறி சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீன் அனுப்பியிருந்தார். அதேபோல் தற்போது மலையாளத்தில் வெளியான மஞ்ஜூமல் பாய்ஸ் படத்திற்கு எதிராகவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சுசித்ராவின் பரபரப்பு அறிக்கை
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுசி லீக்ஸ் என்ற பெயரில், நடிகர் நடிகைகளின் புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமான பாடகி சுசித்ரா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது முன்னாள் கணவர் நடிகர் கார்த்திக் குமார் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் பிரபல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்த சுசித்ராவின் பேச்சு சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் சுசித்ரா மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
'உத்தம வில்லன்' சர்ச்சை
2015-ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் உத்தமவில்லன் திரைப்படம் நஷ்டம் ஏற்பட்டதால் ஒப்பந்தத்தின்படி நஷ்டத்தை ஈடுகட்ட, நடிகர் கமல்ஹாசன் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்று கூறி, 'உத்தம வில்லன்' தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் அமைதியாக இருக்கும் நிலையில், கமல்ஹாசன் கால்ஷீட் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
'இங்க நான் தான் கிங்கு' படத்தில் சந்தானத்தின் சர்ச்சை வசனம்
கடந்த மே 17-ந் தேதி வெளியான சந்தானத்தின் 'இங்க நான் தான் கிங்கு' திரைப்படம் வரவேற்பை பெற தவறிவிட்ட நிலையில், படத்தின் ப்ரோமோவில் சந்தானத்தின் சர்ச்சை வசனம் இருந்ததால், ரிலீஸுக்கு முன்பே சர்ச்சையை கிளப்பியது. இதன் மூலம் சந்தானம் ரசிகர்களை தவறான வழியில் தூண்டியதற்காக பல சினிமா நட்சத்திரங்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.
சமந்தாவின் போலி படம்
மயோசிடிஸ் நோயால் பாதிக்பப்ட்ட நடிகை சமந்தா, ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையில் தனது சிகிச்சை படத்தைப் பகிர்ந்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக, சிலர் நடிகைக்கு எதிராக வெறுப்பை பரப்புவதற்காக சமந்தாவின் மார்பிங் படத்தைப் வெளியிட்டிருந்தனர். இருப்பினும், ரசிகர்கள் நடிகைக்கு ஆதரவாகவும், வைரலாகும் போலி புகைப்படம் குறித்து மற்றவர்களை எச்சரிக்கை செய்யும் விதமாக பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.