சிறு சிறு வேடங்களில் நடித்து காமெடி நடிகராக முத்திரை பதித்து தற்போது தமிழ் சினிமாவின் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள சூரி கருடன் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் புக் ஆகி வரும் நிலையில், தற்போது புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார்.
தமிழ் சினிமாவில், சிறுசிறு வேடங்கில் நடித்து வென்னிலா கபடிக்குழு படத்தின் மூலம் காமெடி நடிகராக பிரபலமானர் சூரி. இந்த படத்தில் அவர் பரோட்டா சாப்பிடும் காட்சி இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்பிறகு தேசிங்கு ராஜா, அரண்மனை, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் காமெடி நடிகராக அசத்தியிருந்தார். ஒரு சில படங்களில் குணச்சித்திர கேரக்டர்களிலும் சிறப்பாக நடித்திருப்பார் சூரி.
ஒரு கட்டத்தில், சுந்தரபாண்டியன், பாண்டிய நாடு உள்ளிட்ட சில படங்களில் 2-வது ஹீரோ என்ற அளவில் நடித்து வந்த சூரி, கடந்த ஆண்டு வெளியான வெற்றிமாறனின் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், சூரிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் வெளியான கருடன் படம் சூரிக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்து அவரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்த்தியுள்ளது.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் கொட்டுக்காளி என்ற படத்தில் நடித்து வரும் சூரி, அடுத்து புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான புருஸ்லீ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, விலங்கு என்ற வெப்சீரிஸின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் பிரஷாந்த் பாண்டியராஜன், இயக்கும் அடுத்த படத்தில் சூரி ஹீரோவாக நடிக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இதன் மூலம் தனது 4-வது படத்தில் ஹீரோவாக கமிட் ஆகியுள்ள சூரி காட்டில் மழைதான் என்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கிய விலங்கு வெப் சீரிஸ் தொடர் கொலைகள் நடப்பதும் அதை ஹீரோவாக விமல் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை பல அதிரடி திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பார். அதேபோல் சூரி நடிக்கும் அடுத்த படமும் ஆக்ஷன் படமாக இருக்கும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“