Cinema Update In Tamil : சினிமா மட்டுமல்ல, தொழில், விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் பிரபலமாக உள்ள அனைவருமே அவர்களை விரும்புவர்கள், ரசிகர்கள் என பலரும் நெருக்கமான பின்பற்றி வருக்ன்றனர். அவர்களின் ஒவ்வொரு அசைவுகளும் பலராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதால், பிரபலங்கள் வெளியிடும் சின்ன பதிவுகள் கூட சமூகத்தில் பெரிய வைரல் தகவலாக பரவி வருவது தொடர்ந்து வருகிறது. இதனால் பிரபலங்கள் பலரும் தங்களது தனிப்பட்ட தகவல்கள் உட்பட பலவற்றை தங்களது சமூகவலைதள பக்கத்தின் வழியாக வெளியிட்டு வருகினறனர்.
இதில் சமீப காலமாக சினிமா பிரபலங்கள் தங்களின் மனைவி அல்லது கணவரை பிரிந்து சொல்வதாக வரும் அறிவிப்புகளே அதிகமாக உள்ளது. தருமணமாகி சில மாதங்கள் முதல் பல வருடங்கள் ஆன தம்பதிகளும் இந்த பட்டியலில் உள்ளனர். அந்த வகையில் இந்த பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்துள்ள தம்பதி நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த். கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியின் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
சமீபத்தில் திருமண வாழ்வை முறித்துக்கொண்ட பிரபலங்கள்
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும் தங்களது 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக நேற்று இருவரும் இணைந்து தங்களது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தனர்.இந்த அறிவிப்பு திரையுலகில் மட்டுமல்லாது தனுஷின் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர்.
சமந்தா ரூத் பிரபு மற்றும் நாக சைதன்யா
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிககையான சமந்தா ரூத் பிரபு பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணமான நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் இவர்கள் தங்களது திருமண உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்தனர்.
சுஷ்மிதா சென் மற்றும் ரோஹ்மன் ஷால்
பிரபல பாலிவுட் நடிகை மாடல் அழகி சுஷ்மிதா சென் தனது பார்ட்னர் ரோஹ்மன் ஷால்வுடன் பரிந்துவிட்டதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,”உறவு நீண்ட காலமாக முடிந்தது.” இருவரும் 2018 ஆம் ஆண்டு முதல் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது.
அமிர்கான் மற்றும் கிரண் ராவ்

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான அமீர் கானும், தயாரிப்பாளர் கிரண் ராவும் திருமணமான 15 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தங்களது திருமண உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்தனர்.
ஷான் மென்டிஸ் மற்றும் கமிலா கபெல்லோ

ஷான் மென்டிஸ் மற்றும் கமிலா கபெல்லோவின் பிரிவு அனைவரையும் அதிர்ச்சியிலும் திகைப்பிலும் ஆழ்த்தியது. இந்த ஜோடி சுமார் இரண்டு வருடங்கள் டேட்டிங் செய்த பிறகு தங்கள் பிரிந்துவிட்டதாகவும், “தொடர்ந்து சிறந்த நண்பர்களாக இருக்க” செய்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
ஜிகி ஹடிட் மற்றும் ஜெய்ன் மாலிக்

ஜிகி ஹடிட் மற்றும் ஜெய்ன் மாலிக் ஆகியோர் 6 வருடங்களுக்கு பிறகு தங்களது உறவை முறித்துக்கொண்டதாக அறிவித்தனர். ஜெய்னுக்கும் ஜிகி ஹடிட்டின் தாயாருக்கும் இடையே நடந்த வன்முறைச் சச்சரவுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த விஷயங்களில் இருவரும் தங்களது உரிமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil