Advertisment

மகிழ் திருமேனி தனது கருத்துக்களை முழுதாக சொன்னாரா? கலகத் தலைவன் விமர்சனம்

ஒரு 'கார்ப்பரேட் அரக்கனை' வீழ்த்த முயற்சிக்கும் ஹீரோ என்ற பழைய கதைதான் என்றாலும் கூட ஹீரோவின் முயற்சி சற்று வித்தியாசத்தை காட்டியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மகிழ் திருமேனி தனது கருத்துக்களை முழுதாக சொன்னாரா? கலகத் தலைவன் விமர்சனம்

நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் நிதி அகர்வால் இணைந்து நடித்துள்ள கலகத் தலைவன் திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் வெளியாகியுள்ள இந்த படத்தை மகழ் திருமேனி இயக்கியுள்ளார்.

Advertisment

இதற்கு முன்பு மகிழ் திருமேனி இயக்கி தடையற தாக்க, மீகாமன், தடம் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் கதைகளத்தில் புத்திசாலித்தனம் இருந்தது. அதிலும் கடைசியாக இவர் இயக்கிய தடம் படத்தின் உண்மை சம்பவத்தை அடிக்கடையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள கலகத் தலைவன் படமும் மகிழ் திருமேனியின் புத்திசாலி தனத்தை நிரூபிக்கும் படங்களில் ஒன்றாக நம்மை நினைக்க வைத்தாலும்,  கடைசி வரை இந்த வார்த்தையை பயன்படுத்த முடியாத நிலையில் தான் படம் உள்ளது. நான்லீனியர் முறையில் உருவாகியுள்ள கலகத்தலைவன் படத்தில்,  எல்லாவற்றையும் காட்டுவதும் விளக்குவதும், பின்னர் அடிக்கோடிட்டுக் காட்டுவதும், காட்சிப்படுத்தல் என நிறைந்த அம்சம்சங்கள் இருந்தாலும், அதுவே ஒரு கட்டத்தை நமக்கு சலிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

ஒரு 'கார்ப்பரேட் அரக்கனை' வீழ்த்த முயற்சிக்கும் ஹீரோ என்ற பழையாக    கதைதான் என்றாலும் கூட ஹீரோவின் முயற்சி சற்று வித்தியாசத்தை காட்டியது. திரைக்கதையில் சில சுவாரஸ்யமான யோசனைகள் உள்ளன. அதேபோல் திரைக்கதை வசனமும் நமக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவும் தவறவில்லை. ஒரு திரைப்படம் உங்களை ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, இயக்குனர் உங்களை கையைப் பிடித்து இழுத்து, அவர் உருவாக்கிய பிரம்மைக்கு உங்களை அழைத்து செல்கிறார் என்று சொல்லலாம்.

திருமாறன் (உதயநிதி ஸ்டாலின்) அறிமுக காட்சியில் இருந்தே அவரது பயணம் தொடங்குகிறது. ஒரு கார்ப்பரேட் அலுவலகத்தில் நடுத்தர வயது ஊழியர் ஒருவர் முதலாளியின் மேற்பார்வையில் தனது வேலையை தொடங்குகிறார். ஆனால் அந்த வேலையில் அவருக்கு உதவி செய்வதற்கு யாரும் இல்லை என்பதால், சற்று சோர்வாக இருக்கிறார். அப்போது ஆண்டவா என்று அவர் கதறும்போது திடீரென்று, அவரது கணினி தானாகவே வேலை செய்யத் தொடங்குகிறது. அதன்பிறகு அவரது வேலை சுளபமாக முடிகிறது. ஹீரோ ரிமோட் மூலம் அவருக்கு உதவுகிறார் என்பது நமக்கு தெரிந்தாலும், மகிழ் இந்த காட்சியை படமாக்கிய விதம் நம்பை மந்தமாக மாற்றியுள்ளது.

அதனைத் தொடர்ந்து திருவைச் சந்தித்த அந்த ஊழியருக்கு கணினி தானாக வேலை செய்வதற்காக டீம் வியூவரைப் பயன்படுத்தியதாக கூறுகிறார். ஒரு டீம் வியூவரை பயன்படுத்தியதாக சொல்வதற்கே இவ்வளவு பெரிய காட்சியை உருவாக்குகிறார் என்றால்  கார்ப்பரேட் உளவு பற்றிய மீதமுள்ள படம் எப்படி வெளிப்பட்டிருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து பாருங்கள்.

திருமாறன், கனரக வாகன உற்பத்தியாளரான தனது முதலாளியின் ரகசியங்களை விற்பதால், பெருநிறுவன உளவு வேலைகளில் ஈடுபடுவதாக காண்பிக்கப்படுகிறது. அந்த நிறுவனத்தின் வாகனங்கள் கார்பன் வாயு சோதனையில் தோல்வியை சந்திதது என்பது வெளியில் தெரியவந்தால், நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடும் என்பதால், இதை மறைக்க முயலும்போது  இந்த தகவல் வெளியில் கசிந்துவிடுகிறது. இதனால் கோபமாகும் கார்ப்பரேட் வில்லன் ரகசியத்தை கசியவிட்ட எலியைக் கண்டுபிடிப்பதற்காக அதிநவீன ஹிட்மேன்களின் குழுவை நியமிக்கிறார்.

பலமான ஹிட்மேன் அர்ஜுன் (ஆரவ்) மற்றும் ரகசியத்தை கசியவிட்ட திருமாறன் இடையே நடக்கும் பூனை எலி விளையாட்டு தான் கலகத்தலைவன் படம். இதில் கலக தலைவனின் ஒரே ஆறுதல் படத்தில் இரண்டு அற்புதமான காட்சிகள் உள்ளன. ஒன்று இடைவேளைக்கு சற்று முன் வரும், காட்சி மற்றும் க்ளைமேக்ஸ் காட்சி. முழுப் படமும் அர்ஜூன் திருமாறன் ஆகிய இருவரை சுற்றி எழுதப்பட்ட உணர்வைதான் தருகிறது. அதே அளவு எழுத்தையும், உழைப்பையும் படத்தின் மற்ற பகுதிகளிலும் இயக்குனர் செய்திருந்தால், கழகத் தலைவன் இன்னும் ஒரு அட்டகாசமான விஷயமாக இருந்திருக்கும்.

படத்தின் மற்ற பகுதிகளைப் பொறுத்தவரை, சித்திரவதை ஆபாச காட்சிகள் மற்றும் திரு மற்றும் மைதிலி (நித்தி அகர்வால்) இடையேயான காதல் ஆகியவற்றுடன் நகர்கிறது.. அர்ஜுன் தனது சந்தேக நபர்களை கட்டிவைத்து சித்திரவதை செய்து கொண்டு வருகிறார். இப்படி சில காட்சிகள் படத்தை தோய்வடைய செய்தாலும், புதுமையான யோசனைகள் மற்றும் ஒரு நல்ல நடிகர் வில்லன் (ஆரவ் புத்திசாலித்தனம்) ஆகியவை படத்தை கடந்து செல்ல முடிகின்றன. இந்த படத்தில் ஆரவ் கதாபாத்திரம் முக்கியமானது. அதை நன்றாகவே அவர் நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். அவரது உடல் மொழி ரசனையை ஏற்படுத்துகிறது.

படம் முழுவதும் கதாநாயகன் பின்னணியில் செல்லாமல் அனைவருக்கும் சமமான முக்கியத்துவம் அளித்ததில் கலகத் தலைவன் வித்தியாசம் காட்டியுள்ளது. வில்லன் வலுவாக இருந்தால் கதையில் சுவாரஸ்யம் இருக்கும் என்பதற்கு இந்த படம் ஒரு முக்கிய சான்று

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment