வனிதா மீது வைத்திருந்த அன்பு உண்மையானது அவருடனான நினைவுகளை நான் இன்னும் மறக்கவில்லை என்று நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது வைரல் நாயகி என்றால் அது வனிதா விஜயகுமார் தான். விஜய்க்கு ஜோடியாக அறிமுகமாகி இருந்தாலும் ஒரு சில படங்களில் மட்டுமே நாயகியாக நடித்திருந்த வனிதா தற்போது யூடியூப் சேனல் தொடங்கி வீடியோ வெளியிட்டு வருகிறார். அதேபோல் குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார்.
வனிதாவின் திருமண வாழ்க்கை தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒன்றாகத்தான உள்ளது. 2000-ம் ஆண்டு ஆகாஷ் என்பரை திருமணம் செய்துகொண்ட வனிதா 2007-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்துவிட்டு அதே ஆண்டு ஆனந்த் ஜெயராஜன் என்பரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண பந்தம் 5 ஆண்டுகள் நீடித்த நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு பீட்டர் பால் என்பரை திருமணம் செய்துகொண்ட வனிதா ஓரிரு நாட்களில் அவரையும் பிரிந்தார். இதற்கு முன்னதாக நடிகரும் நடன இயக்குனருமான ராபர்ட் மாஸ்டருடன் வனிதா வாழ்ந்து வந்தார். இவர்கள் இருவரும் தொடர்பான செய்திகள் மற்றும் புகை்பபடங்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், சில ஆண்டுகளில் இவர்கள் பிரிந்து விட்டனர்.
அதன்பிறகு கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் நண்பர்களாக பழகி வரும் நிலையில், ராபர்ட் மாஸ்டர் நடித்த எம்.ஜி.ஆர். சிவாஜி, ரஜினி, கமல் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது கேம்பிங் வித் வனிதா என்ற நிகழ்ச்சியில் அவருடன் ராபர்ட் மாஸ்டர் பங்கேற்றுள்ளார். இதில் பேசிய வனிதா இவர்கள் இவருவரும் எப்படியெல்லாம் சண்மைபோட்டுக்கொண்டார்கள் இப்போது இருவரும் ஒன்றாக அமர்ந்து சமைக்கிறார்கள் என்று கலாய்ப்பார்கள் என்று சொல்கிறார்.
அதற்கு பதில் அளித்த ராபர்ட் மாஸ்டர் எந்த நினைவுகளையும் என்னால் மறக்க முடியாது. ஒருவர் மீது உண்மையான அன்பும் பாசமும் வைத்துவிடுவேன். அவர்கள் ஏமாற்றினால் கூட எனக்கு தெரியாது. இந்த மாதிரியான விஷயங்களில் தான் நான் ஏமார்ந்திருக்கிறேன். என் வாழக்கையில் 2 முறை திருமணம் தொடர்பான நிகழ்வுகள் நடந்தது. ஆனால் காதல் பெரும் பிரச்சனை. அது மறக்க முடியாத ஞாபகங்களை தான் கொடுத்திருக்கிறது.
நான் எனது கையில் வனிதா என்று தான் டாட்டூ போட்டிருந்தேன். ஆனால் வாழக்கையில் வரும் வெறொரு பெண் இதை பற்றி கேட்டால் என்ன செய்வது என்று அதை அழித்துவிட்டேன். ஆனால் அதை நான் முழுமனதாக செய்யவில்லை. ஆனால் அதை பற்றிய ஞாபகங்கள் இன்னும் என் நினைவில் உள்ளது. இதற்கு வனிதா நாம இருவரும் மெச்சூர்டாக இருப்பதால் தான் இது போன்ற விஷயங்களை அமர்ந்து பேச முடிகிறது என்று கூறியுள்ளார். இவர்களின் உரையாடல் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“